கீழக்கரை சதக்கத்துன் ஜாரியா பள்ளி ஆசிரியருக்கு பணி நிறைவு பாராட்டு விழா!!

கீழக்கரை சதக்கத்துன் ஜாரியா பள்ளி ஆசிரியருக்கு பணி நிறைவு பாராட்டு விழா!!

இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை சதக்கத்துன் ஜாரியா நடுநிலைப்பள்ளியில் செய்யதலி பாத்திமா இடைநிலை ஆசிரியை பணிநிறைவு பாராட்டு விழா நடைபெற்றது,இவ்விழாவில் பள்ளி தலைமை ஆசிரியர் அருட்செல்வி வரவேற்புரை ஆற்றினார்.கல்விக்குழு தலைவர் ஷேக் உசேன் பள்ளித் தாளாளர், பிலால் அப்துல்லா பொருளாளர், ஜமால் அஷ்ரப் நிர்வாக அலுவலர்,செய்யது இப்ராகிம் மற்றும் ஆசிரியர்களும் கலந்து கொண்டனர். அறிவியல் செயல் தூண்டும் விருதுக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட மாணவன் அபினேஷ் க்கு கேடயமும் , பாராட்டும் வழங்கப்பட்டது.மேலும்,தேசிய திறனாய்வுத் தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவர்கள் யுவஶ்ரீ, அல்ஃபத் ரஹ்மான்,யாஷினி ஶ்ரீ , நகுல் தேவன் , மோனிகா ஆகியோருக்கு கேடயமும் , பாராட்டும் வழங்கப்பட்டது. அறிவியல் செயல் தூண்டும் விருது மற்றும் தேசிய திறனாய்வுத் தேர்வில் தேர்ச்சி பெற ஆர்வமூட்டிய, ஆசிரியர்கள் இந்திராகாந்தி மற்றும் கவிப்பிரியா. பாராட்டப்பட்டனர்.




