இராமநாதபுரம்
கீழக்கரை ஹமீதியா ஆண்கள் மேல்நிலைப்பள்ளி ஆசிரியருக்கு விருது

கீழக்கரை ஹமீதியா ஆண்கள் மேல்நிலைப்பள்ளி ஆசிரியருக்கு விருது

ஜெய்சிஐ (JCI) ஈரோடு எக்ஸெல் பதிப்பகத்தின் சார்பில் நடைபெற்ற சிறப்பு விருதளிப்பு விழாவில், ஓய்வு பெற்ற உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியும், முன்னாள் கேரள ஆளுநருமான மாண்புமிகு பி. சதாசிவம் அவர்கள், மாநில அளவிலான “சிறந்த (Best Teacher Award)” கீழக்கரை ஹமீதியா ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் ஆசிரியர் யாசர் அராபத் B, கணித ஆசிரியர், அவர்களுக்கு வழங்கி கவுரவித்தார்.இந்த விழா கல்வித் துறையில் சிறப்பான சேவைகளை ஆற்றிவரும் ஆசிரியர்களை பாராட்டும் நோக்கில் ஏற்பாடு செய்யப்பட்டது. அத்தகைய பெருமைமிக்க தருணத்தில், தனது பணி நெறி, மாணவர்களின் வளர்ச்சிக்கான அர்ப்பணிப்பு, மற்றும் கல்வி துறைக்குச் செய்த சிறப்பு பங்களிப்புக்காக இவ்விருதைப் பெற்றார்.




