இராமநாதபுரம்
NSS நாட்டு நலப்பணித் திட்ட சிறப்பு முகாம்

NSS நாட்டு நலப்பணித் திட்ட சிறப்பு முகாம்:

இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை ஹமீதியா ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் நாட்டு நலப்பணித் திட்ட சிறப்பு முகாம் மூன்றாம் நாள் நிகழ்வில் திட்ட மாணவர்களால் சாலை உழவாரப் பணி மேற்கொள்ளப்பட்டது.
மேலும் பள்ளியின் முதுகலை வேதியியல் ஆசிரியர் மைதீன் அப்பாஸ் கலந்து கொண்டு மாணவர்களுக்கு “டிஜிட்டல் கல்வியில் இளைஞர்களின் பங்கு” என்னும் தலைப்பில் சிறப்புரை ஆற்றினார்கள்.
டிஜிட்டல் சாதனங்கள் மற்றும் சமூக வலைதளங்களை கல்விக்கு ஏற்றவாறு பயன்படுத்துவதை மாணவர்களுக்கு வலியுறுத்தி கூறினார்கள். இந்நிகழ்ச்சி ஏற்பாட்டினை நாட்டு நலப்பணி திட்ட அலுவலர் பசீர் ஏற்பாடு செய்திருந்தார்.





