இராமநாதபுரம்
ஆய்வு

தமிழ்நாடு முதல்வர் மு.க ஸ்டாலின் அவர்கள் வருகின்ற செப்டம்பர் 29,30 ஆகிய இரண்டு தினங்கள் இராமநாதபுரம் மாவட்டத்திற்கு வருகை தர இருப்பதால் மாவட்ட எல்லையான பார்த்திபனூர் பகுதியில் பிரம்மாண்ட வரவேற்பு தர திட்டமிடப்பட்டு நடைபெற்று வரும் பணிகளை இராமநாதபுரம் சட்டமன்ற உறுப்பினர் காதர்பாட்சா முத்துராமலிங்கம் ஆய்வு மேற்கொண்டார்.இந்நிகழ்வில் ஒன்றிய கழக செயலாளர் உள்ளிட்ட கழக நிர்வாகிகள் அனைவரும் பங்கேற்றனர்.





