இராமநாதபுரம் பத்திர பதிவுக்கு ரூ.50 லட்சம் லஞ்சம் – சார் பதிவாளர், இடைத்தரகர் கையும் களவுமாக சிக்கினர்

இராமநாதபுரம் பத்திர பதிவுக்கு ரூ.50 லட்சம் லஞ்சம் – சார் பதிவாளர், இடைத்தரகர் கையும் களவுமாக சிக்கினர்

------------------------
இராமநாதபுரம் மே,22
இராமநாதபுரம் மாவட்டத்தை பூர்விகமாக கொண்ட சென்னை குரோம்பேட்டையில் மருத்துவராக பணிபுரியும் புகார்தாரர் ஹாலிக் அலாவுதீன் 32/26 என்பவர்
இராமநாதபுரம் மாவட்டம் குயவன்குடி கிராமத்தில் உள்ள 1 ஏக்கர் 98 செண்ட் நிலத்தை தனது தாயார் பெயரில் பதிவு செய்ய வெளிப்பட்டிணம் சார் பதிவாளர் இராமநாதனை சந்தித்துள்ளார்.
அப்போது பத்திர பதிவு செய்ய சார் பதிவாளர் ரூ.50 லட்சம் லஞ்சம் கேட்டதாக கூறப்படுகிறது. இதனால் அதிர்ச்சியடைந்த புகார்தாரர், வேறு வழியின்றி ரூ.3 லட்சத்தை சார் பதிவாளரின் வங்கி கணக்கிலும், ரூ.17 லட்சத்தை ஆயூப்கான் என்பவரிடமும் வழங்கியுள்ளார்.
இதையடுத்து கடந்த 18.05.2026 அன்று மீண்டும் பத்திர பதிவு சம்பந்தமாக சார் பதிவாளரை சந்தித்த போது, மீதமுள்ள ரூ.25 லட்சம் கொடுத்தால் மட்டுமே பத்திர பதிவு செய்ய முடியும் என சார் பதிவாளர் கூறியுள்ளார். பின்னர் ரூ.10 லட்சம் குறைத்து ரூ.15 லட்சம் கேட்டதுடன், அதில் ரூ.3 லட்சம் ரொக்கமாக ஆயூப்கானிடம் மற்றும் ரூ.12 லட்சம் குறிப்பிட்ட வங்கி கணக்கில் செலுத்துமாறு கூறியுள்ளார்.
லஞ்சம் கொடுக்க விரும்பாத புகார்தாரர், இராமநாதபுரம் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு போலீசில் புகார் அளித்தார். அதன் பேரில், லஞ்ச ஒழிப்பு போலீசார் ரசாயனம் தடவிய ரூ.3 லட்சம் பணத்தை ஆயூப்கானிடம் கொடுக்கும்போது, ஆயூப்கான் 53/26 மற்றும் வெளிப்பட்டிணம் சார் பதிவாளர் இராமநாதனை 59/26 இன்று (21.05.2026) கையும் களவுமாக கைது செய்தனர்.இச்சம்பவம் தொடர்பாக தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.




