இராமநாதபுரம்
கமுதி பசும்பொன் தேவர் கல்லூரியில் போலீஸ் தேர்விற்கு இலவச பயிற்சி

கமுதி பசும்பொன் தேவர் கல்லூரியில் போலீஸ் தேர்விற்கு இலவச பயிற்சி

இராமநாதபுரம் மாவட்டம் கமுதி பசும்பொன் தேவர் கல்லூரியில் கல்வித்தந்தை பி.கே. மூக்கையா தேவர் அரசு போட்டித்தேர்வு இலவச பயிற்சி மையம் சார்பில் காவலர் தேர்வு இலவச பயிற்சி நடைபெற்றது. சாதி, மத பேதமின்றி நடத்தப்படும் இப்பயிற்சியில் சனி, ஞாயிறு வகுப்புகளும் புதன்கிழமை மாதிரி தேர்வும் நடைபெறும். நூலகம், தங்கும் வசதி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 3844 பணியிடங்களை குறிவைத்து பயிற்சி வழங்கப்படுகிறது.




