தமிழ்நாடு

தென்காசியில் மாவட்ட ஐக்கிய ஜமாத் செயற்குழு கூட்டம் விடி எஸ் ஆர் முகம்மது இஸ்மாயில் தலைமையில் நடந்தது.

தென்காசியில் மாவட்ட ஐக்கிய ஜமாத் செயற்குழு கூட்டம் விடி எஸ் ஆர் முகம்மது இஸ்மாயில் தலைமையில் நடந்தது.
தென்காசி:ஆகஸ்ட் 21.
தென்காசி மாவட்ட ஐக்கிய ஜமாத் செயற்குழு கூட்டம்,தென்காசி புதிய பஸ் நிலையம் அருகில் உள்ள பள்ளிவாசல் வளாகத்தில் ஐக்கிய ஜமாத்தின் மாவட்ட தலைவர் வி.டி.எஸ்.ஆர்.முகம்மது இஸ்மாயில் தலைமையில் நடந்தது, ஐக்கிய ஜமாத்தின் மாவட்ட செயலாளர் பொட்டல்புதூர் எஸ்.பீ.ஷா முன்னிலை வகித்தார், வடகரை அப்துல் ரகுமான் ஆலிம் கிராஅத் ஓதி நிகழ்ச்சியை துவக்கி வைத்தார். இக்கூட்டத்தில் மாவட்டத்தில் உள்ள 8 வட்டாரங்களைச் சேர்ந்த உறுப்பினர்கள் அனைவரும் கலந்து கொண்டார்கள். கடனாநதி அணைக்கு மேலே மலையில் அமைந்திருக்கின்ற சடைமலை கோதரி பாவா தர்காவில், குழப்பங்களை ஏற்படுத்த நினைத்த அமைப்புக்கு இக்கூட்டம் கண்டனம் தெரிவிக்கிறது. அனைத்து ஜமாத்துகளிலும் 18 வயதுக்கு மேல் நிரம்பிய பெண்கள், ஆண்கள் ஓட்டுரிமையை பதிவு செய்ய அறிவுறுத்தப்பட்டது. அடுத்த செயற்குழு கூட்டம் கடையநல்லூரில் வைத்து நடைபெறும் என்று முடிவு செய்யப்பட்டது, இக்கூட்டத்தில் ஐக்கிய ஜமாத்தின் ஆலோசகர் டாக்டர் அமீர்கான் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். மாவட்ட பொருளாளர் கடையநல்லூர் எம் செய்யது இப்ராகிம், துணைத் தலைவர் வல்லம் அண்ணாவி அஹமது மீரான், புளியங்குடி ஜமாத் தலைவர் பீ.என்.எம் மௌலல் கௌமி,சுரண்டை ஜமாத் தலைவர் கமாலூதீன்,ஆலோசகர் சேக் அலி மன்சூர்,தென்காசி மஸ்ஜிதுல் முபாரக் பள்ளி செயலாளர் எம் அப்துல் அஜீஸ், தென்காசி ஐந்து வர்ணம் பள்ளி தலைவர் செய்யது சுலைமான்,புகாரி மீரா சாகிப் மற்றும் பலர் கலந்து கொண்டார்கள்.மாவட்ட தலைமை காஜி ஏ ஒய் முஹ்யித்தீன் ஹஜ்ரத் துஆ உடன் கூட்டம் நிறைவு பெற்றது.கூட்ட ஏற்பாடுகளை ஜக்கிய ஐமாத்தின் ஒருங்கிணைப்பாளர் ரவணசமுத்திரம் முகம்மது ஸலீம், துணை ஒருங்கிணைப்பாளர் தென்காசி அஹமது மீரான் ஆகியோர் சிறப்பாக செய்து இருந்தார்கள்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button