இராமநாதபுரம்

திமுகவில் இணைந்தார் அன்வர் ராஜா சேதாரம் ஆகும் சிறுபான்மையினர் ஓட்டு- ஆடிப் போன அதிமுக

திமுகவில் இணைந்தார் அன்வர் ராஜா சேதாரம் ஆகும் சிறுபான்மையினர் ஓட்டு- ஆடிப் போன அதிமுக

அதிமுக-பாஜக கூட்டணிக்கு எதிர்ப்பு தெரிவித்து அதிமுக சிறுபான்மையின நிர்வாகிகள் கட்சியில் இருந்து விலகி வருகிறார்கள். முக்கிய நிர்வாகி அன்வர் ராஜா அதிமுகவில் இருந்து விலகி திமுகவில் இணைந்தார்.

தமிழக சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ளது. இந்த தேர்தலில் ஆட்சியை பிடிக்க அதிமுக தீவிர களப்பணியை தொடங்கியுள்ளது. திமுகவிற்கு எதிராக வாக்குகளை ஒருங்கிணைக்க அரசியல் கட்சிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தியது. அந்த வகையில் கடந்த நாடாளுமன்ற தேர்தலில் பாஜகவுடன் கூட்டணியை முறித்துக்கொண்ட அதிமுக மீண்டும் பாஜகவுடன் கூட்டணியை உறுதி செய்தது.

ஆனால் இந்த கூட்டணியானது அதிமுகவின் இரண்டாம் கட்ட தலைவர்கள் விரும்பவில்லை. பாஜகவுடன் கூட்டணி அமைத்தால் சிறுபான்மையினரின் ஓட்டுக்கள் அதிமுகவிற்கு கிடைக்காது என தெரிவித்து வந்தனர்.

இருந்த போதும் இந்த கூட்டணியானது தற்போது வரை நீடித்து வருகிறது. எனவே இந்த கூட்டணிக்கு எதிர்ப்பு தெரிவித்து அதிமுக சிறுபான்மையின நிர்வாகிகள் கட்சியில் இருந்து விலகி வருகிறார்கள். அந்த வகையில் தமிழ்நாட்டைச் சேர்ந்த ஒரு முக்கிய அரசியல் பிரமுகராகவும், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் முக்கிய நிர்வாகியாக இருந்த அன்வர் ராஜா அதிமுகவில் இருந்து விலகியுள்ளார். அதிமுக – பாஜக கூட்டணிக்கு வெளிப்படையாக தனது எதிர்ப்பை தெரிவித்து வந்தார். அன்வர் ராஜா தனது அரசியல் வாழ்க்கையை 1960-களில் திராவிட முன்னேற்றக் கழகத்தில் தொடங்கினார். பின்னர், M.G. ராமச்சந்திரன் தலைமையில் அதிமுக தொடங்கப்பட்டபோது, அதில் இணைந்தார்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button