பரமக்குடி மோட்டார் வாகன ஆய்வாளர் அலுவலகத்தில் சோதனை: ரூ.1.90 லட்சம் பறிமுதல்

பரமக்குடி மோட்டார் வாகன ஆய்வாளர் அலுவலகத்தில் சோதனை: ரூ.1.90 லட்சம் பறிமுதல்
ராமநாதபுரம்
இராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடி மோட்டார் வாகன அலுவலகத்தில் வாகன உரிமங்கள், ஓட்டுநர் முறைகேடுகள் நடைபெறுவதாக உரிமங்கள் அளிப்பதில் ஊழல் தடுப்பு, கண்காணிப்புப் பிரிவு போலீஸாருக்கு புகார்கள் வந்தன.
இதன் அடிப்படையில், அந்தப் பிரிவின் ஆய்வாளர் வி.பி.ராமச்சந்திரன் தலைமையிலான போலீஸார் பரமக்குடி மோட்டார் வாகன அலுவலகத்தில் திடீர் சோதனையில் ஈடுபட்டனர்.
மேலும், ஓட்டுநர் உரிமங்கள், கனரக வாகனங்கள், இரு சக்கர வாகனங்களுக்கான உரிமங்கள் வழங்குவதற்கான ஆய்வுப் பணிகள் பரமக்குடி தொழிற் பயிற்சி நிலையம் பகுதியில் நடைபெற்று வந்தன. அங்கு சென்ற போலீஸார் அங்கு பணியிலிருந்த மோட்டார் வாகன ஆய்வாளர் தங்கராஜ், இடைத் தரகர்களிடமிருந்து கணக்கில் வராத ரூ.1.90 லட்சத்தை பறிமுதல் செய்தனர்.
மேலும், இணைய வழியில் நிகழ்ந்த பணப் பரிவர்த்தனைகள் குறித்தும், ஓட்டுநர் பயிற்சிப் பள்ளிகள் நடத்தும் இடங்களுக்கும் சென்று சோதனையில் ஈடுபட்டனர்.
தொடர்ந்து விசாரணை நடத்தி வருவதாகவும், முழு





