இந்திய யூனியன் முஸ்லிம் லீக் பெரியபட்டினம் நகர் சார்பில் தெருமுனை பிரச்சார கூட்டம்

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் பெரியபட்டினம் நகர் சார்பில் கும்பகோணத்தில் நடைபெறும் மஹல்லா ஜமாஅத் ஒருங்கிணைப்பு மாநில மாநாடு விளக்க தெருமுனை பிரச்சார கூட்டம் 21.01.2026 புதன்கிழமை இரவு 7 மணியளவில் பெரியபட்டிணம் இ.யூ.மு.லீக் நகர் அலுவலகம் முன்பு நடைபெற்றது.

நகர தலைவர் எஸ்.அபுதாஹிர் பைஜி தலைமை வகித்து உரையாற்றினார்.
மாவட்ட இளைஞரணி தலைவர் கதியத்துல்லா, நகர் செயலாளர் ஆர்.உசேன் அப்துல் காதர், பொருளாளர் எம்.அய்யூபுக்கான், மாவட்ட இளைஞரணி துணை தலைவர் ஏ.முகம்மது அபூபக்கர், நகர் துணை தலைவர் எம்.அப்துல் லத்தீப் மற்றும் நகர் துணை செயலாளர் ஏ.ஹைசர் அலி உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர்.
மாவட்ட தலைவர் ஏ.வருசை முகம்மது, மாவட்ட செயலாளர் ஏ.எல்.முகம்மது பைசல், மாவட்ட பொருளாளர் எம்.எஸ்.முகம்மது யூனுஸ் ஆலிம், மாவட்ட துணை தலைவர் சாதுல்லா கான், இளைஞரணி மாநில துணைத்தலைவர் என்.நெய்னா முகம்மது, தகவல் தொழில்நுட்ப அணி மாநில செயலாளர் முகம்மது சாபிர்கான், இராமநாதபுரம் நகர தலைவர் வி.முகம்மது காசிம் மற்றும் பாரதி நகர் பிரைமரி தலைவர் சாகுல் ஹமீது ஆகியோர் கருத்துரையாற்றினர்.
மாநில பொருளாளர் எம்.எஸ்.ஏ ஷாஜகான் மற்றும் மாநில துணை செயலாளர் பி.எம்.அப்துல் ஜப்பார் ஆகியோர் சிறப்புரையாற்றினார்.
இதில், இயூ.மு.லீக் நகர் நிர்வாகிகள், முஸ்லிம் மாணவர் பேரவை மாநில முன்னாள் துணை தலைவர் ஈரோடு பாரூக், திமுக கிளை செயலாளர் அன்சாரி, ஜபருல் ஜமான், அப்பாஸ் மற்றும் ஜமாஅத்தார்கள் கலந்து கொண்டனர்.






