இராமநாதபுரம்

பாம்பன் அருகே கஞ்சா செடி வளர்த்து விற்பனை செய்து வந்த மூவர் கைது

பாம்பன் அருகே கஞ்சா செடி வளர்த்து விற்பனை செய்து வந்த மூவர் கைது

இராமேஸ்வரம் அருகே பாம்பனில் கஞ்சா பாக்கெட்களை விற்றவர், வீட்டில் கஞ்சா செடி வளர்த்து விற்றவர் என மூவரை போலீசார் கைது செய்து 1 கிலோ 200 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.

பாம்பன் ரயில்வே ஸ்டேஷன் அருகே தெற்குவாடி கடற்கரையில் சில ஆண்டுகளாக கஞ்சா விற்பனை படுஜோராக நடந்தது.

இதனால் இளைஞர்கள் சிலர் போதைக்கு அடிமையாகி வீதியில் கிடந்தனர்.இந்நிலையில் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர். அதன்படி பாம்பன் பகுதியில் கஞ்சா விற்ற முருகன் 36, சரவணன் 39, இருளேஸ்வரன் 24, ஆகியோரை போலீசார் கைது செய்து அவர்களிடம் இருந்த 1 கிலோ 200 கிராம் கஞ்சா பாக்கெட்டுகளை பறிமுதல் செய்தனர். 50 கிராம் பாக்கெட்டை ரூ. 500க்கு விற்றுள்ளனர்.

மேலும் கஞ்சா வியாபாரி சரவணன், மண்டபம் சமத்துவபுரத்தில் உள்ள தனது வீட்டில் கஞ்சா செடி வளர்த்து பல மாதமாக விற்று வந்துள்ளதாக விசாரணையில் தெரிய வந்தது. பாம்பன் போலீசார் கஞ்சா செடியை பறிமுதல் செய்து வியாபாரிகள் ₹மூவரையும் சிறையில் அடைத்தனர்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button