உடல் தானம் வழங்க பதிவு

பரமக்குடி மெழுகுவர்த்தி நண்பர்கள் ஃபவுண்டேசனின் விழிப்புணர்வின் முயற்சியால் உடல் தானம் வழங்க பதிவு செய்தனர்

இராமநாதபுரம் மாவட்ட பரமக்குடி மெழுகுவர்த்தி நண்பர்கள் ஃபவுண்டேசனின் விழிப்புணர்வு பணியாக அரசு மருத்துவக் கல்லூரி மாணவர்களின் மருத்துவக் கல்வி மற்றும் ஆராய்ச்சி படிப்பிற்கு பயன்படும் வகையில் பரமக்குடியில் உள்ள பாரதி சிலம்பாட்ட பயிற்சிப் பள்ளி நிறுவனத் தலைவர் சண்முகவேல்,பாரதி சிலம்பம் பயிற்சி பள்ளி தலைமை பயிற்சியாளர்,
உமாபாரதி,அய்யனார் சிலம்பம் பயிற்சி பள்ளி பயிற்சியாளர், லாவன்யா,
பரமக்குடி எம் ஜி ஆர் நகர் அங்கன்வாடி உதவியாளர் கல்யாணி ஆகியோர்
இராமநாதபுரம் மாவட்ட மருத்துவக் கல்லூரியில் உடற்கூறுயியல் துறைத் தலைவரும் பேராசிரியருமான
மருத்துவர் கற்பக ஜோதி தலைமையில்,
உடல் தானம் செய்வதற்கு விருப்பப்படிவம் அளித்தனர்.
விருப்பப் படிவத்தை பெற்றுக் கொண்டு உடல் தானம் செய்ததற்கான பதிவு சான்றிதழ்களை மேற்கண்ட பதிவாளர்களுக்கு மருத்துவக் கல்லூரி நிர்வாகம் சார்பில் வழங்கப்பட்டது.
உடன் மருத்துவக் கல்லூரி உடற்கூறுயியல் துறை துணைப் பேராசிரியர், மருத்துவர். புஷ்ப கலா,
உடற்கூறுயியல் துறை உதவி பேராசிரியர், மருத்துவர் பத்மேஷ் மற்றும்
மெழுகுவர்த்தி நண்பர்கள் ஃபவுண்டேஷன் நிறுவனர் சி.மு.முத்துக்குமார் ஆகியோர் உடனிருந்தனர்.




