இராமநாதபுரம்

கமுதி இளைஞர் துபாயில் மரணம் :  அவரது உடலை கீழை கம்யூனிட்டி சென்டர்  மையத்தின் முயற்சியால் சொந்த ஊருக்கு அனுப்பி வைக்கப்பட்டது

கமுதி இளைஞர் துபாயில் மரணம் :  அவரது உடலை கீழை கம்யூனிட்டி சென்டர்  மையத்தின் முயற்சியால் சொந்த ஊருக்கு அனுப்பி வைக்கப்பட்டது

துபாயில் மரணமடைந்த இராமநாதபுரம் மாவட்டம் கமுதி இளைஞரின் உடல் கீழை சமூக மையத்தின் முயற்சியால் சொந்த ஊருக்கு அனுப்பி வைக்கப்பட்டது,

துபாயில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வந்த கமுதியை சேர்ந்த முத்து வழிவிட்டான் கண்ணன் (வயது 39)

கடந்த 19 ஜூலை 2025 அன்று உடல் நலக்குறைவால் மரணமடைந்தார்.

குறிப்பிட்ட காலம் அந்த நிறுவனத்தில் வேலை செய்த இளைஞர் பின்னர் அங்கிருந்து வெளியேறினார். இந்த நிலையில் அவர் திடீரென மரணமடைந்தார்.

இது தொடர்பாக அவரது குடும்பத்தினர் இராமநாதபுரம் நாடாளுமன்ற உறுப்பினர்  கே. நவாஸ்கனியிடம் உடலை சொந்த ஊருக்கு கொண்டு வர கோரிக்கை விடுத்தனர். அதை தொடர்ந்து  கோரிக்கை தொடர்பாக குருவாடி சிராஜுதீன், சமூக ஆர்வலர் முதுவை ஹிதாயத் இடம் தெரிவித்தார். இது குறித்து கீழை கம்யூனிட்டி செண்டரின் முஹம்மது ராசிக் மூலம் இந்திய துணைத் தூதரகத்தின் ஒத்துழைப்புடன் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் மூலம் 27 ஜூலை 2025 ஞாயிற்றுக்கிழமை காலை திருச்சி சர்வதேச விமான நிலையத்துக்கு உடல் வந்தடைந்தது இறந்தவரின் உடலை

திருச்சி ஜமால் முகம்மது கல்லூரி முன்னாள் மாணவர் சங்கத்தின் நல்லுங்கள் அமைப்பின் பேராசிரியர் டாக்டர் ஹெச்.இ. செய்யது முஹம்மது, பேராசிரியர் டாக்டர் கே. ஷேக் பரீத், முகமது ஜியாவுதீன் – சமூக ஆர்வலர் , ஏர்போர்ட் , திருச்சி ஆகியோர்  மூலம் திருச்சி விமான நிலையத்தில் உடல் பெறப்பட்டு குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டது.

பின்னர் இந்த உடல் தமிழக அரசின் அயலகத் தமிழர் நல வாரியத்தின் ஆதரவுடன் ஆம்புலன்சில் சொந்த ஊருக்கு உடல் கொண்டு செல்லப்பட்டது.

இந்த பணியில் ஈடுபட்ட அனைவருக்கும் குடும்பத்தினர் நன்றி தெரிவித்தனர்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button