இபிஎஸ்க்கு பிரமாண்ட வரவேற்பு அளிக்க ஏற்பாடு முதுகுளத்தூர் அதிமுக சார்பில்

இபிஎஸ்க்கு பிரமாண்ட வரவேற்பு அளிக்க ஏற்பாடு முதுகுளத்தூர் அதிமுக சார்பில்

இராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் சட்டமன்ற தொகுதி, முதுகுளத்தூரில் வருகின்ற ஜூலை 31 வியாழக்கிழமை மக்களை காப்போம், தமிழகத்தை மீட்போம் என்று சுற்றுபயணமாக வருகை தரும் அதிமுக பொதுச்செயலாளர், முன்னாள் முதல்வர், எடப்பாடி பழனிச்சாமி பேருந்து நிலையம் அருகே உரையாற்றுகிறார். இவருக்கு முதுகுளத்தூர் பேரூர் கழகம் சார்பில் பிரமாண்ட வரவேற்பு அளிக்க வேண்டும் என்று முடிவு செய்யப்பட்டது. அதற்கான பணிகளை இராமநாதபுரம் மாவட்ட கழக செயலாளர் எம்.ஏ. முனியசாமி ஆணைக்கினங்க தற்போதே தொடங்கிவிட்டனர். முதுகுளத்தூர் பேரூராட்சியில் உள்ள 15 வார்டுகளை சேர்ந்த நிர்வாகிகள் மற்றும் பேரூர் சார்பு அணி நிர்வாகிகள் பொது மக்களை சந்தித்து அழைப்பு விடுத்து வருகின்றனர். குறைந்தது முதுகுளத்தூர் பேரூர் கழகம் சார்பில் 2000 பேர் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. முதன் முதலாக முதுகுளத்தூர் பகுதிக்கு உரையாற்ற வருகை தரும் எடப்பாடி பழனிச்சாமியின் வருகை இப்பகுதியில் பெறும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.




