SDPI கட்சி கோரிக்கையை ஏற்று முதுகுளத்தூர் அரசு மருத்துவமனையில் மருத்துவர்கள் நியமனம்

SDPI கட்சி கோரிக்கையை ஏற்று முதுகுளத்தூர் அரசு மருத்துவமனையில் மருத்துவர்கள் நியமனம்

இராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் அரசு மருத்துவமனையில் கூடுதல் நிரந்தர மருத்துவர்களை நியமித்திட வலியுறுத்தி எஸ் டி பி ஐ கட்சி முதுகுளத்தூர் நகர் சார்பில் நேற்று காத்திருப்பு போராட்டம் நடை பெறவிருந்த நிலையில் முதுகுளத்தூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் வட்டாட்சியர் தலைமையில், சுகாதாரத் துறை மற்றும் காவல் துறை அதிகாரிகள் முன்னிலையில் அமைதிப் பேச்சு வார்த்தை நடைபெற்றது.
இதில் எஸ் டி பி ஐ கட்சி இராமநாதபுரம் மேற்கு மாவட்ட தலைவர் நூருல் அமீன் தலைமையில் எஸ் டி பி ஐ கட்சி நிர்வாகிகள் மேற்கு மாவட்ட துணைத் தலைவர் மீரான் முஹைதீன் முதுகுளத்தூர் சட்ட மன்றத் தொகுதி தலைவர் முஹம்மது ரபீக், தொகுதி செயலாளர் சத்தார் மைதீன், நகர் தலைவர் காதர்சுல்தான், பொறியாளர் அணி மாவட்ட தலைவர் சுல்தான் சம்சுதீன், செயற்குழு உறுப்பினர் ரைசூல் இஸ்லாம் சேட், நகர் பொருளாளர் முஹம்மது இப்றாகிம், முன்னாள் நகர் தலைவர் அப்துல் அஜீஸ் ஆகியோர் அமைதிப் பேச்சு வார்த்தையில் கலந்து கொண்டனர்.
எஸ் டி பி ஐ கட்சி யின் பிரதான கோரிக்கை களான, புதிய மருத்துவர்கள் நியமனம், கூடுதல் மருத்துவ பணியாளர்கள் நியமனம், மருத்துவமனையில் தடையில்லா மின்சாரம், உள்ளிட்ட கோரிக்கைகள் பேச்சு வார்த்தையில் முன்வைக்கப்பட்டன. கோரிக்கைகளை ஏற்றுக்கொண்ட அதிகாரிகள் புதிதாக மூன்று மருத்துவர்கள் நியமனம் செய்யப்பட்ட உத்தரவு நகலை வழங்கினார்.




