கவிதைகள் (All)

பொங்கல் நல்வாழ்த்துக்கள் -2026

பொங்கல் நல்வாழ்த்துக்கள் -2026

போகி , போகி , போகியோடு 

போகட்டும் துன்பமெலாம் 

பொங்கலோ பொங்கல் என்று

பொங்கட்டும் இன்பமெலாம். 

மார்கழியின் பனிமூட்டம் 

தையினிலே விலகட்டும்.

காரிருளை விலக்கிவிட

சூரியனே ஒளிரட்டும். 

சூரியனுக்கு பொங்கலிட்டு 

ஏருழவர் மகிழட்டும். 

மாட்டுக்கு பொங்கலிட்டு 

மனிதர் நன்றி காட்டட்டும்.

ஆதவனுக்கு நன்றி.

ஆவினங்களுக்கும் நன்றியென

நன்று செய்தவர்க்கெல்லாம்

நன்றி கூறும் திருவிழா.

காணும் பொங்கல் உறவைப்

பேணுகின்ற திருவிழா.

தை பிறந்தால் வழி பிறக்குமென

தையலர் மனம் குளிரட்டும்.

எண்ணத்தை நிறைவேற்றி

இன்பத்தை நல்கட்டும். 

உலகோர்க்கு பசி தீர்க்கும்

உழவர்க்கு நன்றி சொல்வோம்.

உழவர் வாழ்வு சிறக்கட்டும். 

உற்சாக வாழ்வு மலரட்டும். 

மகரஜோதி தரிசனம் கண்டு 

மணிகண்டன் பக்தர்கள்

மனக் குறைகள் தீரட்டும்.

மகிழ்ச்சி வாழ்வில் நிறையட்டும். 

சங்கராந்தி கொண்டாட்டம் 

சங்கடங்கள் தீர்க்கட்டும்.

எங்கும் வளம் நிறைந்து 

மங்களம் உண்டாகட்டும். 

அன்புடன் வாழ்த்தும்,

சிலேடை சித்தர் சேது சுப்பிரமணியம். 

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button