இராமநாதபுரம்
மரக்கன்று நடும் விழா

இராமநாதபுரம் சேதுபதி நகர், அன்னை சரஸ்வதி மகளிர் பசுமை பூங்காவில், இராமநாதபுரம் மாவட்ட தேசிய பசுமை படை ஒருங்கிணைப்பாளர், புலவர் தீனதயாளன் தலைமையில், பாவேந்தர் பாரதிதாசன் அய்யா அவர்களின் 135-வது பிறந்த நாளை முன்னிட்டு, ஆலம் மரக்கன்றுகள் நடவு செய்து இனிப்பு வழங்கி சிறப்பாக கொண்டாடப்பட்டது. இந்நிகழ்வில் நிக்கோலஸ் சிலம்பாட்ட பயிற்சியாளர் மேத்யூ இம்மானுவேல் மற்றும் சிலம்பாட்ட மாணவர்கள் கலந்து கொண்டனர். இந்நிகழ்வை பசுமை முதன்மையாளர், பொருளாதார குற்றப்பிரிவு சிறப்பு சார்பு ஆய்வாளர் சுபாஷ் சீனிவாசன் செய்திருந்தார்.





