1. Home
  2. அதிரை கவியன்பன் கலாம்

Category: அதிரை கவியன்பன் கலாம்

புன்னகை

புன்னகை” இதயக் கண்களைக் கூச வைக்கும் மின்னல் உள்ளத்தின் வார்த்தைகள் உள்ளடக்கிய உதட்டின் மொழி உணர்வின் சூரியக் கதிர்கள் உதடுச் சந்திரனில் பிம்பம் இதழ்களின் ஓரம் இளம்பிறையின் வடிவம் சீறும் பாம்பு மனிதர்களை ஆறும்படி ஆட்டுவிக்கும் மகுடி காந்தமாய் ஈர்க்கும் சாந்த சக்தி அரசனையும் அடக்கும் அறிஞர்களின் ஆயுதம்…

வளைகுடா வாழ்கை!

வளைகுடா வாழ்கை! விசாயிருந்தால் மட்டுமே விசாரிக்கப்படுவார்! திரும்ப்பிப் போவதாயிருந்தால் விரும்பிப் பழகப்படுவார்! தோசைக்குள்ள மரியாதை அப்பத்துக்கும் இடியப்பத்துக்கும் இல்லை! ஆசையை அடக்கி வைத்து ஆகாயத்தில் பறப்பவனுக்கே பாசவலை! வெள்ளைக் கைலியின் வெளுப்பு மஞ்சளாகு முன்பு முல்லைக் கொடி மனையாளை விட்டும் முந்திப் பயணமாகினால் தான் அன்பு! பசியாறுதலும் பலகாரங்களும்…

மாமனிதர் நபிகளார் முஹம்மத் (ஸல்)

அல்லாஹ் வழங்கிய அருட்கொடை அகிலத்தின் அனைத்து வினாக்கட்கும் முஹம்மத்(ஸல்) அவர்களின் வாழ்வுதான் ஒருவிடை     அள்ளக் குறையாப் பாத்திரம் அறியாமை நிறைந்திருந்த அற்றைப் பொழுதினில் அறிவை வளர்த்த சூட்சமம்     பணிவு என்பதன் பொருளாக பண்பகராதியில் முஹம்மத்(ஸல்) என்றே உணரப்படும் படைத்தோன் தந்த அருளாக  …

மழை

வாழ்க்கைக்குச் சொன்ன பாடம் வழிந்தோடிய வெள்ளத்தில் செல்வந்தரையும் ஏழையையும் ஒன்றாய்ச் சுமந்த ஓடம் மதங்களுக்குள் வேறுபட்ட மனங்களை ஒன்றுபடுத்திச் சென்றது மாமழையே! சிறுதுளி பெருவெள்ளமாம் இல்லை இங்குதான் பெருவெள்ளத்தில் நாமெல்லாம் சிறுதுளியானோம்!   தரையிறங்கத் தரையின்றித் தத்தளித்துச் சுற்றியது ஹெலிகாப்டர்!   எங்கு நோக்கினும் தண்ணீர் ஒருமிடறு குடிக்க…

மனைவி

மனைவியென்னும் மாதரசி நாடும் அன்பை மகிழ்வுடனே மதித்திடுவோம் அவளின் பங்கை நினைவிலென்றும் நீங்காது நெஞ்சில் மேவும் நித்தமவள் வழங்கிவரு மின்பம் யாவும் சுனைநீராய் வற்றாமல் தியாகம் செய்வாள்; சுரக்குமன்பால் மறவாமல் நியாயம் செய்வோம்! பனைமரமாய் நற்பலன்கள் தருவாள் என்றும் பகுத்தறிவைப் பயன்படுத்திச் செய்வோம் நன்றி     சலவையையும் சளைக்காமல் செய்வாள்;ஊணும் சமைத்திடுவாள்; இல்லத்தில் தூய்மை காணும் நிலவினைப்போல் வெளிச்சமாக்கி வைத்துக் காத்து நிற்குமவள் செயலுக்குச் சொல்வோம் வாழ்த்து புலமையுடன் கூரறிவும் பெற்ற இல்லாள் புத்தியுடன் கணவனுக்கு வழியும் சொல்வாள் கலவரமாய் முகத்தினில் ரேகைப் பார்த்து கவலைகளும் போக்கிடுவாள் அன்பை ஈந்து     இல்லாளை மதிப்போர்க்கு வாழ்க்கை இன்பம் இல்லாத சந்தேகம் கொண்டால் துன்பம் பொல்லாத பழிகளையும் நம்ப வேண்டா பொய்சொல்லி ஆபத்தில் சிக்க வேண்டா நல்லோராய்க் குழந்தைகள் வளர வேண்டி நாடோறும் கஷ்டங்கள் யாவும் தாண்டி சொல்லொண்ணாப் பொறுமையினை நெகிழ்ந்து யோசி சொர்க்கமெனக் கொண்டாடி மகிழ்ந்து நேசி   -அதிரை கவியன்பன் கலாம், அபுதாபி

மழை என்னும் மழலையின் சினம்

மழை என்னும் மழலையின் சினம்   கடற்றாயின் கருவாகி கருமுகில் சூலில் உருவாகி இடியின் வலியுடன் இறங்கிய மழையென்னும் மழலை மீண்டும் கடற்றாய் மடிதேடி அலைபாயும் வேளையில் அதற்கென்று உருவான அணைகளும், குளங்களும், ஏரிகளுமான அழகியத் தொட்டில்கள் அழிக்கப்பட்டதனால் தூர்வாரல் என்னும் தூய்மை நடைபெறாததால் தானிருக்க வேண்டிய இடங்களைத்…

அமீரகம்..

அமீரகம்.. அன்பின் அகம் பண்பின் சுகம் நட்பிகளில் பேரிடம் நானிலத்தின் ஓரிடம்   எண்ணெய்ச் சுரங்கம் என்னை வார்தெடுத்த எழில்மிகு அரங்கம்   அதிரைப்பட்டினம் அடியேனின் பாடசாலை அபுதபிப் பட்டணம் அடியேனின் தொழிறசாலை   பாலைவனத்தையும் பசுஞ்சோலையாக்கிய வேலையாட்களை வேகமாய் உயர்த்திய வேகம் குறையாததால் மோகம் கொண்டு மொய்க்கின்றோம்!…

அரும்பு

நான் விரும்பும் நல்லதோர் அரும்பு அரும்பு சிரித்தால் பூமணம் அதனாலே சுற்றிலும் உள்ளவர்கள் ஆவலுடன் அணைப்பர் நெஞ்சில் ஒருகணம் குழலின் ஓசையாய்க் குழைவு குறைகளெல்லாம் மறக்கடித்து நெருங்கத்தான் கூப்பிடும் உன்றன் விழைவு திராட்சைக் கருவிழி அசைவால் தீர்ந்துபோகும் துன்பங்கள் துயரங்கள் எல்லாமே ஈடிலா மழலை இசையால் பேசும் சித்திரக்…

கடுதாசி என்னும் காதல் பேசி

நடுநிசி நேரத்துல நானுந்தான் உறங்கல கடுதாசி வரும்வரை கதவையும் திறக்கல என்னெஞ்சைப் புரிஞ்சவரே எழுதுங்கக் கடுதாசி மின்னஞ்சல் வேணாங்க மின்னலாய் மறைஞ்சுடுமே வாசக் கதவை மூடிவிட்டு வாசிப்பேன் உன் கடுதாசி நேசக் கதவைத் திறந்துவச்சு நெஞ்சுக்குள்ளே பூட்டிவச்சு மண்ணுக்குள் உழுதாக்கி மறைச்சு வச்ச விழுதாக்கி எண்ணத்தை எருவாக்கி என்னையே…

வானவில்

வானவில் வானச் சாசனம் ….வர்ணப் பாசனம் வேனல் இயற்கையின் …..விரிமயில் ஆசனம் ஊஞ்சல் மோகனம் ….ஓளிவில் வாகனம் தீஞ்சொற் கவிதையின் ….திசைமகள் சீதனம் சொர்ண மாளிகை ….சுந்தரத் தூளிகை வர்ணப் பீடமேல் ….வான்மகள் ஆளுகை நவமணிப் பட்டியல் ….நளினமின் வெட்டியல் குவைமணிச் சரடெனக் …..கோத்தபொன் அட்டியல் கதம்பத் தோரணம்…