அரும்பு

Vinkmag ad
நான் விரும்பும் நல்லதோர் அரும்பு
அரும்பு சிரித்தால் பூமணம்
அதனாலே சுற்றிலும் உள்ளவர்கள் ஆவலுடன்
அணைப்பர் நெஞ்சில் ஒருகணம்
குழலின் ஓசையாய்க் குழைவு
குறைகளெல்லாம் மறக்கடித்து நெருங்கத்தான்
கூப்பிடும் உன்றன் விழைவு
திராட்சைக் கருவிழி அசைவால்
தீர்ந்துபோகும் துன்பங்கள் துயரங்கள் எல்லாமே
ஈடிலா மழலை இசையால்
பேசும் சித்திரக் கவிதை
பேசாமல் நீயிருந்தால் எங்கட்குக் கவலையாகும்
பேரின்ப ஊற்றாம் குழந்தை
உன்றன் கிறுக்கல் ஓவியம்
உன்னிடத்தில் உறைந்திருப்பான் இறையவனும்
உன்றன் பாட்டுக் காவியம்
கன்னம் போதைக் கிண்ணம்
அமுதமாய்ச் சுரக்கின்ற அன்பென்னும் ஊற்றாக
அள்ளி தருவதுன் எண்ணம்
மின்னல் தோற்கும் சிரிப்பு
மீண்டும்நீ தரவேண்டி தவமிருக்கும்
எங்கள் நெஞ்ச விரிப்பு
-அதிரை கவியருவி கவியன்பன் கலாம், அபுதாபி

News

Read Previous

அன்றாட வாழ்க்கையில் ஆண்டவனுக்கு என்ன வேலை?

Read Next

ரத்த தான முகாம்: அமைச்சர் பங்கேற்பு

Leave a Reply

Your email address will not be published.