கலம்பகம்
“கலம்பகம் ” பாடாத கவிஞன், கால் கவிஞன்!
↙↘↙↘↙↘↙↘↙↘↙↘↙↘↙
🉐தமிழ் மண்ணில் இரண்டாயிரம் ஆண்டுகளாக தோன்றிய இலக்கியத்திற்குள்ளாக இணைந்து பயணித்து வந்துள்ளனர், தமிழ் முஸ்லிம்கள்!
🉐”தமிழிலக்கியத்தில் “கலம்பகம்” என்றொரு வகை;
🉐கலம்பகம் பாடாத கவிஞனை, கால் கவிஞன் என்பது பழங்காலப் பழமொழி!
🉐”கலம்பகம்” – கலவை என்பது பொருள்! சங்க நூல், “பெரும்பாணாற்றுப்படை” நூலில்,
🉐”பல்பூ மிடைந்த படலைக் கண்ணி” (174)
என்று ஓர் வரி வருகின்றது;
🉐பலவித பூக்கள், பச்சை இலைகள் சேர்த்து பின்னப்பட்ட பூமாலை,
“கலம்பகம்”.
🉐கி.மு. 2 – ஆம் நூற்றாண்டில் தோன்றிய தொல்காப்பியத்தில் இடம் பெற்றுள்ள இலக்கிய உறுப்புகளான; “அம்மானை, ஊசல், காலம், வண்டு, கைக்கிளை, பாண், தழை, இரங்கல், குறம், தூது என்கிற கலம்பக அக உறுப்புகள்;
மறம், புயம் என, புறம் சார்ந்தன மூலம் பாடப் பெற்றதே கலம்பகம்” என்ற இலக்கிய வகை!
🉐கலம்பகம் முதல் நூல் “நந்திக்கலம்பகம்”; கி.பி. ஒன்பதாம் நூற்றாண்டில் மூன்றாம் நந்திவர்மன் மன்னனை பாட்டுடைத் தலைவனாகக் கொண்டு பாடப்பட்டது, இந்த நூலைத் தொடர்ந்து பல கலம்பக நூல்கள் இயற்றப்பட்டன!
🉐கலம்பகத்தின் நோக்கம்:
இறைவனையோ, அரசனையோ, தலைவனாகக் கொண்டு, பலவகைச் செய்யுள்களால் பாடப்படுவது!
🉐இதுவரை வெளியாகியுள்ள கலம்பகம் பாடல் நூல்கள் மொத்தம், 177.
🉐இவற்றில் முஸ்லிம்கள் எழுதிய கலம்பக நூல்கள்;
1) “திருமதீனத்துக் கலம்பகம்”-பிச்சை இபுறாகீம் புலவர்!
2) “மதுரை கலம்பகம்” – சோதுகுடி அப்துல் காதிர் நாவலர் எழுதியது, பாடல் ;
“கெரம்மைக் குவட சையச் சுடர்விழிவேல் போராடக் கம்மக் கலனுஞ் சிலம்புங் கலந்தார்ப்ப மும்மைத் தமிழ்மதுரை முக்கணப்பன் சீர்பாடி யம்மென் மருங்கொசிய வாடுக பொன்னூச லழகெறிக்கும் பூண்முலையீ ராடுகபொன்னூசல்(மதுரைக்கலம்பகம்)
3)”மதீனா கலம்பகம்” – குலாம் காதிறு நாவலர்; நபிகளாரின் மதினா வாழ்வை பாடிய பாடல்!
4)”பதாயிகுக் கலம்பகம்”-குலாம் காதிறு நாவலர்; பாக்தாதில் அடங்கியிருக்கும் அஹமது கபீர் நாயகத்தை முன் வைத்து பாடியது!
5) “நாகைக் கலம்பகம்” – ஜவ்வாது புலவர்; நாகையின் சிறப்புகளைக் கூறும் நூல்!
6) “மதீனா கலம்பகம்” சீவரத்தினக் கவிராயர் என்னும் முகமது லெப்பை
பாடிய பாடல் ;
அன்பாயென் னீமானைக் காலாய் நாட்டி ஆனகுரு உபதேசச் சட்டஞ் சேர்த்து இன்பான தஇனிலமை பலகை கோத்திட் இச்சையெனுஞ் சங்கிலியை இசைவாய்ப் பூட்டி வன்பாக மிருளோட்டி ஆடீ ரூசல் மதினமா நகர்க் கரசே ஆடீ ரூசல் மூன்பாயுண் டானவரே ஆடீ ரூசல் முகம்மதுற் றசூல்நபியே ஆடீ ரூசல்” – மதினக் கலம்பகம்; “ஊசல்” வகை பாட்டு!
7) “மக்கா கலம்பகம்” – செய்கு அப்துல் காதிர்நயினார்!
8)”நாகூர்க் கலம்பகம்” – குலாம் காதிறு நாவலர், நாகூரில் அடங்கியுள்ள இறைநேசரைக் குறித்து பாடியது!
9) “குவாலீர்க் கலம்பகம்” குலாம் காதிறு நாவலர்; நாகூர் ஷாஹுல் ஹமீது பாதுஷா அவர்களின் ஆன்மீகக் குரு, குவாலியர் நகரில் வாழ்ந்த கெளது நாயகம் குறித்து பாடியது!
10)”பாக்தாது கலம்பகம்” -ஆசிரியர் பெயர் அறிய இயலவில்லை!
🉐நாகூர் குலாம் காதிறு அவர்கள் பெரும் புலவர், இவருடைய மாணவர்;
மறைமலை அடிகள்!
குலாம் பாடிய ‘ஆரிபு நாயகம்’ என்னும் சீரிய நூலுக்கு பின்வருமாறு இலங்கை பொன்னம்பலம் பிள்ளையின் பாடல்;
“நாகூ ரென்னும் நகர வாசன்
பாகூ ருஞ்சொல் பயின்றிடு நேசன்
பற்பல விதமாப் பகர்பிர பந்தம்
பற்பல புராணம் பழுதறச் செய்தோன்
ஆசு மதுரமும் அருஞ்சித் திரமும்
மாசு மதுரமாய் அமைத்திட வல்லோன்
தொல்காப் பியமுதல் சூழிலக் கணமும்
தொல்காப் பியமும் சூழ்ந்தினி தாய்ந்தோன்
பாவலர்க் கினிய பகர்குலாம் காதிறு
நாவல னென்னு நற்பெயர் கொண்டோன்”.
- Sothugudiyan @ jahangeer : 30/05/2025
🈵🈵🈵🈵🈵🈵🈵🈵🈵🈵🈵🈵🈵🈵🈵