இராமநாதபுரம்

கமுதி பசும்பொன் தேவர் கல்லூரியில் சுயநிதி பாடப்பிரிவுகளை தொடர்ந்து நடத்த ஆலோசனை கூட்டம் நடைபெற்றது

கமுதி பசும்பொன் தேவர் கல்லூரியில் சுயநிதி பாடப்பிரிவுகளை தொடர்ந்து நடத்த ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

இராமநாதபுரம் மாவட்டம் கமுதி கோட்டைமேட்டில் உள்ள பசும்பொன் உ.முத்துராமலிங்கத்தேவர் கல்லூரியில் சுயநிதி பாடப்பிரிவுகளை தொடந்து நடத்த ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

பசும்பொன் திரு. முத்துராமலிங்கத் தேவர் நினைவுக் கல்லூரியில் 2025-26 கல்வியாண்டில் முதலாம் ஆண்டு மாணவர் சேர்க்கை நடைபெற்று வருகிறது அதனை தொடர்ந்து சுயநிதி பாடப்பிரிவில்
பி.ஏ. ஆங்கிலம், எம். காம்., வணிகவியல் ஆகிய இரண்டு பாடப்பிரிவுகளுக்கு இதுவரை மாணவர் சேர்க்கை நடைபெறாமல் இருந்தது . முதலாமாண்டு மாணவர் சேர்க்கைக்கான எந்தவிதமான நடவடிக்கை எடுக்காமல் ஆங்கிலத்துறையில் பயிலும் இரண்டாம், மூன்றாம் ஆண்டு மாணவர்களை கல்லூரியில் ஆசிரியர் பற்றாக்குறை இருப்பதால் அவர்களுக்கு சுயநிதி வகுப்புகளுக்கான தொகையினை வாங்காமல் மாணவர்களை வேறு கல்லூரிக்கு மாற்றம் செய்யும் வேண்டும் என்ற எண்ணத்தில் இருப்பதாக தகவல் அறியப்பட்டது . இதனை அறிந்த கமுதி, முதுகுளத்தூர்,
கடலாடி ,சாயல்குடி, திருச்சுழி, அபிராமம், சுற்றுவட்டார கிராம பொதுமக்களும் ஆப்பநாடு மறவர் சங்க நிர்வாகிகள், கமுதி தாலுகா மறவர் சங்க நிர்வாகிகள், பசும்பொன் தேவர் கல்லூரி முன்னாள் மாணவர்கள் சங்கம், திருச்சுழி வட்டார முக்குலத்தோர் சங்கம் பல்வேறு சங்கத்தின் அனைத்து நிர்வாகிகளும் இச்சம்பவம் தொடர்பாக கல்லூரிக்குச் சென்று முதல்வரிடம் சந்தித்து கல்லூரி நலன், மாணவர்களின் எதிர்கால வளர்ச்சி சம்பந்தமாகவும், தொடர்ந்து பி.ஏ., ஆங்கிலத்துறை
எம். காம்.,வணிகவியல் துறை சிறப்பாக செயல்பட வேண்டும் என்றும் ஆசிரியர்கள் பற்றாக்குறை ஏற்படுமானால் உடனடியாக ஆசிரியர்கள் நியமிக்கு மாறும். கல்லூரியில் காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை கல்லூரியில் மாணவர்களுக்கு சரியான முறையில் வகுப்புகளை அனைத்து பேராசிரியர்களும், துறை சார்ந்த வகுப்புகளுக்கு தவறாமல் பாடம் எடுக்க வேண்டும்,கல்லூரியில் வாட்ச்மேன் வசதியினை அமைத்து தர வேண்டும் என்றும் பல்வேறு கோரிக்கை மனு முன்னிறுத்தி முதல்வரையும் மற்றும் பேராசிரியர்களின் சந்தித்து அறிவுறுத்தினர்கள் . பிறகு தமிழக வனத்துறை அமைச்சர் ஆர்.எஸ்.ராஜ கண்ணப்பன் அவர்களுக்கு ஆன்லைன் மூலமாக புகார் மனு அளிக்கப்பட்டது. உடனடியாக தொலைபேசியில் தொடர்பு கொண்டு விரைவில் அனைத்தையும் சரி செய்ய வேண்டும் என்று முதல்வருக்கு ஆணையிட்டார்.
நிகழ்வில்
கமுதி தாலுகா மறவர் சங்க நிர்வாகிகள் தலைவர் செல்லம்,செயலாளர் ராமமூர்த்தி, பொருளாளர் கே. வேப்பங்குளம் முத்து, ஆப்பநாடு மறவர் சங்க செயலாளர் வழக்கறிஞர் குணசேகரன்,தூவல் இராமசாமித்தேவர், முன்னாள் மாணவர் சங்க நிர்வாகிகள்,முன்னாள் தலைவர் மூக்கூரான், முன்னாள் செயலாளர் வழக்கறிஞர் முத்துராமலிங்கம், செயலாளர் வழக்கறிஞர் ஆறுமுகம், பொருளாளர் முத்துகிருஷ்ணன், ஆசிரியர் கணேசன், ஆசிரியர் முத்துகிருஷ்ணன், கணக்கி
சண்முக மூர்த்தி, நாகராஜ், திருச்சுழி வட்டார முக்குலத்தோர் சங்கத்தின் தலைவர் ஆலடிபட்டி கோபிநாத்தேவர், இராமர், செல்வம், கமுதி தாலுகா மறவர் சங்கத்தின் நிர்வாகிகள் ஆசிரியர் கணேசன், செல்லப்பாண்டியன், வே.மாயகிருஷ்ணன்,
மு.வெள்ளைப்பாண்டியன், வழக்கறிஞர் வேலவன் மற்றும் பொதுமக்களும் கலந்து கொண்டனர்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button