இராமநாதபுரம்

கமுதி அருகே விபத்து : 3 பேர் பலி

கமுதி அருகே இரண்டு கார்கள் நேருக்கு நேர் மோதிக்கொண்ட பயங்கர விபத்தில், ஒரே குடும்பத்தைச் சேர்ந்த தந்தை, தாய் மற்றும் மகன் என 3 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

ராமநாதபுரத்தை சேர்ந்தவர் சோலையப்பன் (67). இவரது மகன் சோலை செல்வம் (30). ஜவுளி வியாபாரம் செய்து வந்தனர். நேற்று முன்தினம் சோலையப்பன், மனைவி விஜயலட்சுமி (60), மகன் சோலை செல்வத்துடன் காரில், சொந்த ஊரான விருதுநகர் மாவட்டம், தும்முசினம்பட்டி கிராமத்திற்கு சென்று குலதெய்வ வழிபாட்டை முடித்து விட்டு நேற்று காலை ஊர் திரும்பிக் கொண்டிருந்தார். காரை மகன் சோலை செல்வம் ஓட்டினார். பரளச்சி – கமுதி விலக்கு பகுதியில் அய்யனார்குளம் அருகே எதிரே வந்த டூவீலர் மீது மோதாமல் இருக்க காரை செல்வம் திருப்பினார். அப்போது எதிரே வந்த மற்றொரு கார் மீது நேருக்கு நேர் மோதியது. இதில் சோலையப்பன், மகன் சோலை செல்வம், மனைவி விஜயலட்சுமி ஆகிய மூவரும் உயிரிழந்தார். இதுகுறித்து கமுதி போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button