சாயல்குடியில் எஸ் டி பி ஐ கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்

சாயல்குடியில் எஸ் டி பி ஐ கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்

கீழக்கரை அக்,3
இராமநாதபுரம் மேற்கு மாவட்டம் எஸ் டி பி ஐ கட்சி சார்பில் சாயல்குடி மூக்கையூர் சாலை சந்திப்பில் வாக்காளர்களின் உரிமைகளைப் பாதுகாக்க வலியுறுத்தியும், தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் பதவி விலகக்கோரியும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.ஆர்ப்பாட்டத்திற்கு எஸ் டி பி ஐ கட்சி இராமநாதபுரம் மேற்கு மாவட்ட செயலாளர் காஜா முஹைதீன் தலைமை தாங்கினார்.
முதுகுளத்தூர் சட்டமன்றத் தொகுதி தலைவர் முஹம்மது ரபீக் வரவேற்புரையாற்றினார். SDPI கட்சியின் மேனாள் விருதுநகர் மாவட்ட தலைவர் அலி அஹமது நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கினார்.
ஆர்ப்பாட்டத்தில் SDPI கட்சி இராமநாதபுரம் மேற்கு மாவட்ட பொதுச்செயலாளர் பாஞ்சுபீர், விமன் இந்தியா மூவ்மென்ட் (WIM) இராமநாதபுரம் மேற்கு மாவட்ட தலைவர் கன்சுல் மஹரிபா ஆலிமா, Young Democrats இராமநாதபுரம் மேற்கு மாவட்ட ஒருங்கிணைப்பாளர் நவாஸ் ஷரீப் ஆகியோர் கண்டன உரையாற்றினர்.
தொடர்ந்து, SDPI கட்சி இராமநாதபுரம் மேற்கு மாவட்ட தலைவர் நூருல் அமீன் கண்டன சிறப்புரையாற்றினார்.
ஆர்ப்பாட்டத்தில் வாக்காளர்களின் உரிமைகள், தேர்தல் நடைமுறைகளின் மீதான நம்பிக்கை மற்றும் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடுகள் தொடர்பான கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டன. தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் பதவி விலக வேண்டும் என்ற கோரிக்கையையும் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றவர்கள் முன்வைத்தனர்.
மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த கட்சியின் மாவட்ட, தொகுதி, நகர, கிளை நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள், விமன் இந்தியா மூவ்மென்ட், Young Democrats உள்ளிட்ட அணிகளின் நிர்வாகிகள் மற்றும் ஆதரவாளர்கள் கலந்து கொண்டனர்.
இறுதியாக மாவட்ட பொருளாளர் செய்யது சதக்கத்துல்லா அவர்கள் நன்றியுரையாற்றினார்.




