கமுதியில் லாட்ஜ் மீது பெட்ரோல் குண்டு வீச்சு போலீஸ் விசாரணை . . . .
கமுதியில் லாட்ஜ்மீது பெட்ரோல்குண்டுவீச்சு போலீஸ்விசாரணை . . . .
ராமநாதபுரம்
ராமநாதபுரம் . மாவட்டம் கமுதி கண்ணார்பட்டியில் அருப்புக்கோட்டை செல்லும் சாலையில் முத்துக்குமாருக்கு சொந்தமான லாட்ஜ் உள்ளது இங்கு கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு தங்குவதற்கு அறை கேட்டு இரண்டு பேர் வந்தார்களாம் அவர்கள் மீது முத்துக்குமார் மகன் தினேஷ்க்கு சந்தேகம் ஏற்பட அறை வழங்க மறுத்துவிட்டாராம் இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு பைக்கில் வந்த இருவர் ஹெல்மெட் அணிந்து கையில் கொண்டு வந்த பெட்ரோல் குண்டை லாட்ஜ் மீது வீசிவிட்டு தப்பிச் சென்றனர் முகப்பு ஹால் தீப்பற்றியது இந்த CCTV காட்சிகளையும் மேலும்
இந்த சம்பவம் குறித்து கமுதி போலீசாருக்கு தகவல் தெரிவிக்காமல் தினேஷ் இன்ஸ்டாகிராம் வாட்ஸ்சாப் குருப் பேஸ்புக் போன்ற சமூக வளைத்தளங்களில் பதிவிட்டுள்ளார் இதனை பார்த்த. கமுதி போலீசாரும் உளவுத்துறை போலீசாரும் சம்பவம் நடந்த இடத்துக்கு விரைந்து சென்று ஆய்வு மேற்கொண்டனர். தடயவியல் நிபுணர்கள் ஆதாரங்களை சேகரித்ததுடன், அப்பகுதியில் உள்ள CCTV காட்சிகளையும் போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர். முத்துக்குமாருக்கு மேலும் கமுதி நகருக்குள் இரண்டு லாட்ஜ் உள்ளது பழய தாலுகா அலுவலரோட்டில் உள்ளதில் CCTV இல்லாததால் விபச்சாரம் நடைபெறுவதாகவும் அழைத்துவரும் பெண்களால் ஆண்கள் அடிக்கடி சண்டை நடைபெறும் எனவும் காவல்துறையினர் கண்டுகொள்ளமாட்டார்கள் என இந்த பகுதி பொதுமக்கள் கூறுகின்றனர் மேலும் சந்தைபேட்டை அருகில் உள்ள தங்கும் விடுதியில் சுமார் மூன்று வருடங்களுக்கு முன்பு கமுதி DSP.மணிகண்டன் இருந்தபோது ஆயூதங்களுடன் நான்குபேர் பிடிபட்டனர் அவர்களுடன் ஒரு பெண்ணும் இருந்துள்ளார் இந்த பேட்ரோல்குண்டு வீச்சு நடைபெற்ற லாட்ஜ்சில் கேரளா ஆந்திரா கர்நாடகா பதிவு எண்கொண்ட கார்கள் அடிக்கடி வந்து நிற்கும் வருபவர்கள் நீண்டநாள்கள் தங்கி செல்வார்கள் இந்த விடுதியிலும் வெளிமாநில பெண்களை வைத்து விபச்சாரம் நடைபெற்று வருவதாகவும் அடிக்கடி போதையில் சண்டை நடப்பதாகவும் அருகில் உள்ள கடையில் மதுபானம் நள்ளிரவிலும் விற்பதாக சமூக ஆர்வலர்களும் இந்த பகுதிக்கு அருகேயுள்ள ஊருகளுக்கு செல்லும் பொதுமக்களும் தெரிவிக்கின்றனர் ஆகவே காவல்துறையினர் வெளிமாநில நபர்கள் நடமாட்டத்தையும் விபச்சாரத்தையும் மதுபான விற்பனையையும் அறவே தடுத்து நிறுத்திட வேண்டுமாய் கமுதி பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்




