இராமநாதபுரம்

பரமக்குடி அருகே மின்சாரம் தாக்கி ஊழியர் பலி

பரமக்குடி அருகே மின்சாரம் தாக்கி ஊழியர் பலி

இராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடி அருகே உள்ள நென்மேனி கிராமத்தில் உள்ள மின்கம்பத்தில் பழுது நீக்கும் பணியில் ஈடுபட்டிருந்த ஊழியர் ஒருவர் மின்சாரம் தாக்கி உயிரிழந்தார்.

சம்பவ விவரம்:
நென்மேனி கிராம மின்கம்பத்தில் பழுது நீக்கும் பணியில் ஈடுபட்டிருந்த சவுந்தர பாண்டியன் என்பவர் எதிர்பாராதவிதமாக மின்சாரம் தாக்கியது.

இதில் தூக்கி வீசப்பட்ட அவர் மின்கம்பத்தில் இருந்து கீழே விழுந்து படுகாயமடைந்தார். உடனடியாக மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button