கடலாடி காமராசர் மெட்ரிக் பள்ளியில் மாவட்ட அளவிலான சிலம்ப போட்டி; முன்னாள் அமைச்சர் வ.சத்தியமூர்த்தி துவக்கி வைத்தார்

கடலாடி காமராசர் மெட்ரிக் பள்ளியில் மாவட்ட அளவிலான சிலம்ப போட்டி; முன்னாள் அமைச்சர் வ.சத்தியமூர்த்தி துவக்கி வைத்தார்

இராமநாதபுரம்;
இராமநாதபுரம் மாவட்டம் கடலாடி காமராசர் மெட்ரிக் பள்ளியில் இராமநாதபுரம் மாவட்ட சிலம்பாட்ட சங்கம்,தமிழ்நாடு சிலம்பாட்ட கழகம், இந்தியன் சிலம்பம் பெடரேஷன் சார்பில் மாவட்ட அளவிலான சிலம்பபோட்டி நடைப்பெற்றது.மூன்று பிரிவுகளாக நடைப்பெற்ற இப்போட்டியினை மலட்டாறு வி.வி.எஸ்.எம் மெட்ரிக் பள்ளி சேர்மனும் முன்னாள் அமைச்சருமான வ.சத்தியமூர்த்தி தலைமையேற்று துவக்கி வைத்தார்.காமராசர் மெட்ரிக் பள்ளி தாளாளர் முனியசாமி முன்னிலை வகித்தார்.இதில் புதுக்கோட்டை, மதுரை,தூத்துக்குடி,திருச்சி,சிவகங்கை,விருதுநகர் மாவட்டங்களில் இருந்து 300க்கும் மேற்ப்பட்ட சிலம்பாட்ட வீரர்கள் பங்கேற்றனர்.தேசிய,மாநில அளவிலான சிலம்பாட்ட போட்டிகளில் நடுவர்களாக பணியாற்றிய நடுவர்குழுவினர் சிறப்பாக பணியாற்றினர்.இதற்கான ஏற்பாடுகளை சிலம்பம் ஆசிரியர் முத்துமாரி தலைமையிலான குழுவினர் செய்திருந்தனர்.




