7 பேர் கைது 24 மணி நேரத்தில் கடத்தப்பட்ட நபர் மீட்பு – இராமநாதபுரம் மாவட்ட காவல்துறையின் துரித நடவடிக்கை

7 பேர் கைது 24 மணி நேரத்தில் கடத்தப்பட்ட நபர் மீட்பு

இராமநாதபுரம் மாவட்ட காவல்துறையின் துரித நடவடிக்கை
இராமநாதபுரம் மாவட்டம் திருப்புல்லாணி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் ஷேக் நஸ்ருதீன் என்பவர் காரில் கடத்திச் செல்லப்பட்டதாக அவரது தாயார் அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.
24 மணி நேரத்தில் மீட்பு
மாவட்ட காவல் கண்காணிப்பாளர் . G. சந்தீஷ், IPS அவர்களின் தலைமையில் திருப்புல்லாணி காவல்துறையினர் நடத்திய தீவிர விசாரணையில், கடத்தப்பட்ட ஷேக் நஸ்ருதீன் பாதுகாப்பாக 24 மணி நேரத்திற்குள் மீட்கப்பட்டார்.
7 பேர் கைது
இவ்வழக்கு தொடர்பாக கீழ்கண்ட 7 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்:
- நபில் அகமது
- முகம்மது நௌபல் அலி
- சாகுல் ஹமீது
- முகமது ரக்கீம்
- அப்துல் ரகுமான்
- செய்யது சிபாயுதீன்
- சதாம் உசேன்
கைது செய்யப்பட்டவர்கள் மீது சட்டரீதியான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் கடத்தல் மற்றும் பிற குற்ற செயல்களில் ஈடுபடுவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எச்சரித்துள்ளார்.




