இராமநாதபுரம்

இராமநாதபுரம் நகை கடன் மோசடி கூட்டுறவு சங்க செயலாளர் கைது

இராமநாதபுரம் நகை கடன் மோசடி கூட்டுறவு சங்க செயலாளர் கைது

இராமநாதபுரம் மாவட்டம் எஸ்.கொடிக்குளம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் அடகு வைத்த நகைகளை தனியாரிடம் மறு அடகு வைத்து ரூ.50 லட்சம் வரை மோசடி செய்ததாக கூட்டுறவு சங்க செயலாளர் சிவா பிரபு 58, கைது செய்யப்பட்டார்.
இந்த சங்கத்தில் எஸ்.கொடிக்குளம், சேமனுார், உரத்துார், அனுமநேரி உள்ளிட்ட சுற்றுவட்டார கிராமங்களை சேர்ந்த மக்கள் 2024 முதல் 2026ல் அடகு வைத்த நகைகளை செயலாளர் சிவா பிரபு , இராமநாதபுரத்தில் உள்ள தனியார் அடகுக்கடைகளில் ரூ.50 லட்சத்திற்கு மேல் அடகு வைத்து கையாடல் செய்தார்.
இந்த மோசடி குறித்து பரமக்குடி கூட்டுறவு சங்க துணைப்பதிவாளர் ரத்தினவேல் புகாரில், இராமநாதபுரம் பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிந்து சிவாபிரபுவை தேடி வந்தனர்.இந்நிலையில் இன்ஸ்பெக்டர் ஜெயக்கொடி, எஸ்.ஐ.,க்கள் நந்தகுமார், மாசாணம், எஸ்.எஸ்.ஐ., சுபாஷ் சீனிவாசன் உள்ளிட்டோர் இராமநாதபுரம் லாட்ஜில் தலைமறைவாக தங்கி இருந்த அவரை கைது செய்தனர் பின்னர்
இராமநாதபுரம் ஜே.எம்.,-1 நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி மதுரை மத்திய சிறையில் அடைத்தனர்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button