இராமநாதபுரம்

முதுகுளத்தூர் பேரூராட்சி நிர்வாகம் சார்பில் திறக்கப்படும் தண்ணீரில் புழுக்கள் கலந்து வருவதாக புகார்

முதுகுளத்தூர் பேரூராட்சி நிர்வாகம் சார்பில் திறக்கப்படும் தண்ணீரில் புழுக்கள் கலந்து வருவதாக புகார்

ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் பேரூராட்சியில் பொதுமக்களின் அத்தியாவசிய தேவைகளுக்காக விநியோகிக்கப்படும் தண்ணீரில் சிறிய புழுக்கள் கலந்து வருவதாக பொதுமக்கள் புகார் தெரிவித்துள்ளனர். குறிப்பாக
பேரூராட்சி பகுதியில் உள்ள 1 வது வார்டு வடக்கூர் பகுதியில் உள்ள வீடுகளில் தண்ணீரை பயன்படுத்தும் மக்கள், தண்ணீர் தொட்டியில் புழுக்கள் காணப்படுவதால் அதனை பயன்படுத்த அச்சமடைந்துள்ளனர். இதனால் பொதுமக்களுக்கு தொற்றுநோய்கள் பரவும் அபாயம் இருப்பதாகவும் அவர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.
எனவே தண்ணீர் தொட்டிகள் மற்றும் குழாய்களை ஆய்வு செய்து, தண்ணீரை பாதுகாப்பாக வழங்க பேரூராட்சி நிர்வாகம் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button