இராமநாதபுரம்
பரமக்குடி எம்.எல்.ஏ. தொகுதி மக்களிடம் குறைகளை கேட்டறிந்தார்

பரமக்குடி எம்.எல்.ஏ. தொகுதி மக்களிடம் குறைகளை கேட்டறிந்தார்

ராமநாதபுரம்
ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி சட்டமன்ற அலுவலகத்தில், பரமக்குடி நகர் பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள், தங்கள் பகுதியில் அடிப்படை வசதிகளை மேம்படுத்தித் தருமாறு, பரமக்குடி சட்டமன்ற உறுப்பினரான கேகேகதிரவனை நேரில் சந்தித்து கோரிக்கை மனு அளித்தனர் அப்போது
பொதுமக்களின் கோரிக்கைகளை பொறுமையாகவும் கவனமாகவும் கேட்டுக் கொண்ட சட்டமன்ற உறுப்பினர் சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுடன் ஆலோசித்து, தேவையான நடவடிக்கைகள் விரைந்து மேற்கொள்ளப்படும் என பொதுமக்களிடம் உறுதியளித்தார்.
இந்நிகழ்வில், பரமக்குடி நகர்மன்றத் தலைவர் சேது கருணாநிதி, நகர் கழகச் செயலாளர் ஜீவரத்தினம், மற்றும் பரமக்குடி மேற்கு ஒன்றிய கழகச் செயலாளர் கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் உடனிருந்தனர்.





