கீழக்கரை நகர் SDPI கட்சியின் செயற்குழு கூட்டத்தில் உள்ளாட்சித் தேர்தலில் அதிகமான இடங்களில் போட்டியிடுவதாக தீர்மானம்!!!

கீழக்கரை நகர் SDPI கட்சியின் செயற்குழு கூட்டத்தில் உள்ளாட்சித் தேர்தலில் அதிகமான இடங்களில் போட்டியிடுவதாக தீர்மானம்!!!

கீழக்கரை மே,25
இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை எஸ் டி பி ஐ கட்சி நகர் செயற்குழு கூட்டம் நகர் தலைவர் முகமது ஜலீல் தலைமையில் நடைபெற்றது.
நகர் செயலாளர்
கீழை அஸ்ரப் வரவேற்புரை ஆற்றினார்.
செயற்குழு கூட்டத்திற்கு சிறப்பு அழைப்பாளராக மாவட்ட அமைப்பு பொதுச் செயலாளர் ஜெமீல் கட்டமைப்பு விரிவாக்கம் சம்பந்தமாகவும் உள்ளாட்சித் தேர்தலில் கட்சிப் போட்டியிடுவது சம்பந்தமாகவும் விரிவாக விளக்க உரையாற்றினார்.
மாவட்டத் துணைத் தலைவர் ஜஹாங்கீர் அரூசி அவர்கள் மாவட்ட செயற்குழு உறுப்பினர் நூருல் ஜமான் மற்றும்
தொகுதி செயலாளர் அக்பர் அலி அவர்கள் முன்னிலை வகித்தனர்.
கீழக்கரையில் அதிகமான வெறிநாய்கள் பிரதான சாலைகளான வள்ளல் சீதக்காதி சாலையில் மற்றும் அனைத்து தெருக்களிலும் சுற்றித் திரிகிறது இந்த வெறி நாய்களினால் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பயந்து செல்கின்றனர் இந்த தெருநாய்களை உடனடியாக அப்புறப்படுத்த வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது,
கீழக்கரை அரசு மருத்துவமனை கட்டிடம் பாதி நிறைவடைந்து உள்ளது அந்த கட்டிடத்தை உடனடியாக துரிதமாக நடவடிக்கை எடுத்து பொதுமக்களுக்கு பயன்படும் வகையில் அமைத்து தர வேண்டும் என்று இந்த செயற்குழு மூலமாக கேட்டுக் கொள்கின்றது.
புது கிழக்குத் தெருவில் அமைந்துள்ள ஆரம்ப சுகாதார நிலையம் கட்டிடம் கடந்த சட்டமன்ற உறுப்பினரும் தற்போதைய சட்டமன்ற உறுப்பினர் ஆகிய காதர் பாட்ஷா என்ற முத்துராமலிங்கம் அவர்கள் திறந்து வைத்த நிலையில் மக்களின் பயன்பாட்டிற்கு வராத நிலையில் மீண்டும் அதை புதுப்பித்து மக்களுடைய பயன்பாட்டிற்கு கொண்டு வருமாறு இந்த நகர் செய்த குழு கூட்டம் வாயிலாக கேட்டுக் கொள்கின்றோம்.
அனைத்து வார்டுகளிலும் தொற்றுநோய் பரவும் அபாயம் இருப்பதால் கிணற்றுக்கு மருந்துகள் ஊற்ற வேண்டும் மற்றும்
போர்க்கால அடிப்படையில் கீழக்கரை முழுவதும் கொசுக்கள் நிறைந்துள்ளதால் கொசு மருந்துகள் அனைத்து வார்டுகளிலும் அடிக்க வேண்டும் என்று இந்த செயற்குழு கேட்டுக் கொள்கின்றது.
இந்நிகழ்வில் மாவட்ட ஊடகப்பிரிவு தலைவர் சுபைர் தொகுதி துணைத் தலைவர் தாஜுல் அமீன், செயற்குழு உறுப்பினர் பக்ருதீன் அலி, துணை தலைவர் ஹாஜா அலாவுதீன், பொருளாளர் கலீல் ரஹ்மான், இணை செயலாளர்கள் பாரூக் ராஜா முஹம்மது ஹமீது பைசல், செயற்குழு உறுப்பினர் அகமது நதீர் , செயல்வீரர்கள் யூசுப், நெய்னா ஆகியோர் கலந்து கொண்டனர்.




