இராமநாதபுரம்

விளம்பர கம்பங்களாகும் மின்கம்பங்கள் !!!தனியார் இணையதள வயர்களால் பாதிப்புக்கு உள்ளாகும் மின்வாரிய ஊழியர்கள்

விளம்பர கம்பங்களாகும் மின்கம்பங்கள் !!!
தனியார் இணையதள வயர்களால் பாதிப்புக்கு உள்ளாகும் மின்வாரிய ஊழியர்கள்

ராமநாதபுரம்
இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை நகரில் மின்சார வாரியத்திற்குச் சொந்தமான மின்கம்பங்கள் விளம்பரக் கம்பங்களாக மாறி வருவது பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் மத்தியில் கவலையை ஏற்படுத்தியுள்ளது.
மின்கம்பங்களில் விளம்பர பேனர்கள், கட்டப்படுவது தொடர்கதையாக உள்ளது.
“மின்கம்பங்களில் விளம்பர பதாகைகள் கட்டுவதால் மின் விபத்துக்கள் ஏற்படும் அபாயம் அதிகம். காற்று, மழை காலங்களில் இவை அறுந்து மின்கம்பிகளில் விழுந்து பெரும் விபத்தை ஏற்படுத்தலாம்” என சமூக ஆர்வலர்கள் எச்சரிக்கின்றனர்.
மின்கம்பங்களில் பதாகைகள் கட்டப்படுவதால் மின்வாரியப் பணியாளர்கள் பராமரிப்புப் பணிகள், பழுது நீக்கும் பணிகளை மேற்கொள்ள கடும் சிரமப்படுகின்றனர். மின்கம்பத்தில் ஏறும்போது பதாகைகள் இடையூறுகள் ஏற்படுத்தும் வகையில் உள்ளது ,சாலையோர மின்கம்பங்களில் கட்டப்படும் விளம்பர பேனர்கள் வாகன ஓட்டிகளின் கவனத்தை திசை திருப்புகின்றன. காற்றில் ஆடும் பதாகைகள் விபத்தை ஏற்படுத்தும் அபாயம் உள்ளதாகவும் பொதுமக்கள் கூறுகின்றனர்.
விதிகளை மீறி மின்கம்பங்களில் கட்டப்பட்டுள்ள அனைத்து விளம்பரப் பதாகைகளையும் உடனடியாக அகற்ற வேண்டும். மீண்டும் பதாகை கட்டுவோர் மீது மின்வாரியமும், நகராட்சியும் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button