இராமநாதபுரம்முதுகுளத்தூர்

முதுகுளத்தூரில் கடையை உடைத்து கொள்ளை

ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூரில் பரமக்குடி சாலையில் உள்ள மாடன் ஸ்டோர் என்ற மொத்த வியாபார கடையை நேற்று நள்ளிரவில் மர்ம நபர்கள் உடைத்துள்ளனர். உரிமையாளர் ராமபாண்டிக்கு இன்று (செப்.2) காலை தகவல் கிடைத்தது.

கடையின் பூட்டை உடைத்து, ரூ. 1.40 லட்சம் ரொக்கம், ரூ. 80 ஆயிரம் மதிப்புள்ள சிகரெட் பாக்கெட்டுகள் மற்றும் பிற பொருள்களை திருடிச் சென்றுள்ளனர். இது குறித்து முதுகுளத்தூர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டதையடுத்து, போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து ஆய்வு செய்தனர். கைரேகை நிபுணர்கள் மற்றும் மோப்பநாய் உதவியுடன் விசாரணை நடைபெற்று வருகிறது

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button