இராமநாதபுரம்
திருவாடானை : ரேஷன் அரிசி கடத்தல்

ராமநாதபுரம் மாவட்டம் திருவாடனை அருகே கல்லூரில் சரக்கு வாகனத்தில் கடத்தப்பட்ட 1400 கிலோ ரேஷன் அரிசியை ராமநாதபுரம் உணவுப்பொருள் கடத்தல் பிரிவு எஸ். ஐ. அருண் தலைமையிலான போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அவ்வழியாக வந்த சரக்கு வாகனத்தை சோதனை செய்த போது 28 மூட்டைகளில் 50 கிலோ எடையுள்ள 1400 கிலோ ரேஷன் அரிசியை பறிமுதல் செய்தனர்.இதில் கடலாடியைச் சேர்ந்த காளீஸ்வரன் 35 வயது திருக்காளிமுத்து வயது 22 ஆகியோரை கைது செய்தனர் விசாரணையில் அரிசியை சிவகங்கை மாவட்டம் புதுவயல் போன்ற இடங்களில் உள்ள அரிசி ஆலைகளுக்கு கொண்டு செல்ல இருந்தது தெரிய வந்துள்ளது.





