இராமநாதபுரம்

கீழக்கரை நகர் ஐயுஎம்எல் சார்பில் ஹஜ் பெருநாள் சந்திப்பு:தாய்ச்சபையில் இணைப்பு நிகழ்வு

கீழக்கரை நகர் ஐயுஎம்எல் சார்பில் ஹஜ் பெருநாள் சந்திப்பு:தாய்ச்சபையில் இணைப்பு நிகழ்வு

கீழக்கரை நகர் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் சார்பில் ஹஜ் பெருநாள் சந்திப்பு மற்றும் தாய்ச்சபையில் புதியவர்கள் இணைப்பு உள்ளிட்ட நிகழ்ச்சி நடைபெற்றது.இதில் சிறப்பு அழைப்பாளர்களாக மாநில பொருளாளர் எம்.எஸ்.ஏ ஷாஜகான், மாநில துணை செயலாளர் பி.எம். அப்துல் ஜப்பார் ஆகியோர் பங்கேற்றனர்,மாநில இளைஞரணி துணைத் தலைவர் கீழை. என்.நெய்னா முகம்மது மற்றும் ரஹ்மத்துல்லாஹ் ஏற்பாட்டில் 50க்கும் மேற்பட்டோர் தாய்சபையில் இணைந்தனர்,இந்நிகழ்ச்சிக்கு கீழக்கரை நகர தலைவர் சேகு ஜமாலுதீன் தலைமை தாங்கினார்.
நகர செயலாளர் ஹபீப் முஹம்மது தம்பி வரவேற்புரை வழங்கினார்.
நகர பொருளாளர் குதுபுதீன் ராஜா, அமீரக காயிதே மில்லத் பேரவை துணைத் தலைவர்கள் முகம்மது காமீல், அபுதாஹிர் பைஜி உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர்.
பழைய குத்பா ஜமாஅத் தலைவர் ஹாஜா முகைதீன் உள்ளிட்டவர் கலந்து கொண்டு உரையாற்றினர்.
மாநில இளைஞரணி துணைத் தலைவர் நெய்னா முகம்மது நன்றியுரையாற்றினார்.
நகர துணை செயலாளர்
பௌசுல் அமீன் தொகுத்து வழங்கினார்.
மாவட்ட இளைஞரணி தலைவர் கதியத்துல்லா, எஸ்.டி.யூ மாவட்ட செயலாளர் பைரோஸ்கான், மாவட்ட தகவல் தொழில்நுட்ப அணி ஒருங்கிணைப்பாளர் சுல்தான் சலாவுதீன், இராமநாதபுரம் நகர செயலாளர் சிராஜுதீன், கீழக்கரை நகர நிர்வாகிகள் அல் நூர் ஹசன், லெப்பை தம்பி, சாகுல் ஹமீது, செல்லவாப்பா, மாவட்ட இளைஞரணி துணை செயலாளர் துபைல், நகர இளைஞரணி தலைவர் கல்வத்தி, இளைஞரணி நிர்வாகிகள் உசைன், கலீல் ரஹ்மான், அபூபக்கர் சித்திக், சஹாதத், ரசின் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்,

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button