கீழக்கரை:மாயாகுளத்தில் தொடக்கப்பள்ளி கட்டிடம் திறப்பு எம்.எல்.ஏ காதர்பாட்சா முத்துராமலிங்கம் பங்கேற்பு

கீழக்கரை:மாயாகுளத்தில் தொடக்கப்பள்ளி கட்டிடம் திறப்பு எம்.எல்.ஏ காதர்பாட்சா முத்துராமலிங்கம் பங்கேற்பு

கல்வி வளர்ச்சியே திராவிட மாடலின் அடையாளம்” – சட்டமன்ற உறுப்பினர் உரை
இராமநாதபுரம் சட்டமன்ற தொகுதி, திருப்புல்லாணி ஒன்றியம், மாயாகுளம் ஊராட்சியில் நேருஜி தொடக்கப்பள்ளி கட்டிடத்தை இராமநாதபுரம் மாவட்ட கழக செயலாளரும், சட்டமன்ற உறுப்பினருமான காதர்பாட்சா முத்துராமலிங்கம் திறந்து வைத்து சிறப்புரையாற்றினார்.
மாயாகுளம் ஊராட்சியில் நேருஜி தொடக்கப்பள்ளி கட்டிட திறப்பு விழா நடைபெற்றது. எம்.எல்.ஏ காதர்பாட்சா முத்துராமலிங்கம் கட்டிடத்தை திறந்து வைத்தார்.
எம்.எல்.ஏ சிறப்புரை:
விழாவில் பேசிய சட்டமன்ற உறுப்பினர் காதர்பாட்சா முத்துராமலிங்கம், “தமிழ்நாட்டின் முன்னாள் முதலமைச்சர், திமுக கழக தலைவர் .மு.க.ஸ்டாலின் அவர்களின் தலைமையில் நடைபெற்ற கடந்த திராவிட மாடல் ஆட்சியில் கல்வியின் வளர்ச்சி எந்த அளவிற்கு முன்னேறி இருந்தது என்பதற்கு இந்த புதிய பள்ளிக்கட்டிடமே சான்று. மாணவர்களின் எதிர்காலத்தை வளமாக்கும் பணியில் திமுக அரசு என்றும் முன்னிற்கும்” என்றார்.
மேலும், “உங்கள் உரிமை காக்கும் சட்டமன்ற உறுப்பினராக எப்போதும் உங்களோடு இருப்பேன். இராமநாதபுரம் தொகுதியின் கல்வி, சுகாதாரம், அடிப்படை கட்டமைப்பு வளர்ச்சிக்கு தொடர்ந்து பாடுபடுவேன்” என உறுதியளித்தார்.




