கவிதைகள் (All)

காலம்…

காலம்…

நீண்டத் தூரம்
வந்து விட்டேன்
பயணம் மிகுந்த
சிரமமத்தில்…

களைத்து போனது
உடலும் உள்ளமும்
சேமிப்பு இழந்து
செலவுகள் செய்து..

திரும்பி பார்க்கிறேன்
துவங்கிய இடத்திலேயே
வந்து நிற்கிறேன்
உலகு உருண்டை
அதனாலோ….

வரிசையை பார்கிறேன்
ஆயிரக்கணக்கில்
வளமிழந்து வாழ்விலந்து
வருத்தம் கொண்ட
வரிப்புலிகள்…

தேவைகள் கூடியதால்
அன்றாடம் புதியவர்கள்
வருகை சேவைக்கு அல்ல
சீர்த்திருத்தவும் அல்ல
செருக்குடன் அள்ளி
குவிக்க…

குடியானவன் கோவணம் கொடியாக கோட்டை மீது
கொண்டாடி மகிழும்
சுயலம் வளத்துடன்
வன்மம் காட்டி….

தெருவெங்கும் தேடல்
தியாகமும் சேவையும்
ஓடி ஒழிந்ததால்
அத்துமீறலும் அடவடியும்
ஆயுதத்துடன்….

சனநாயக தேரில்
ஊழல் உலா..
ஊடகங்கள் உற்சாகம்
உண்மையை சொல்ல
தண்டனை தண்டம்…

நேர்மை நெருப்பு
நித்தமும் அணைக்க
தன்நல தடாகம்
தாவி வந்தது தலைமை
மதிப்பில்…

திரும்பி பார்க்கிறேன்
தொடங்கி இடத்தில்
தோழமைகள் இன்றி
தொல்லையுடன்..

வீரகனூர் ஆ. இரவிச்சந்திரன் சேலம்

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button