இராமநாதபுரம்

நவாஸ்கனி எம்பி கோரிக்கை

நவாஸ்கனி எம்பி கோரிக்கை

திட்வா புயலில் காரணமாக இலங்கை விமான நிலையத்தில் விமானங்கள் ரத்து செய்யப்பட்டு காத்திருக்கும் தமிழக பயணிகளுக்கு மாற்று விமானம் மற்றும் உரிய உதவிகளை வழங்க இந்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று
நவாஸ்கனி எம்பி கோரிக்கை விடுத்துள்ளார் இதுகுறித்து ஒன்றிய வெளியுறவுத்துறை மற்றும் விமான போக்குவரத்து துறை அமைச்சருக்கு நவாஸ்கனி எம்பி விடுத்துள்ள கோரிக்கையில் திட்வா புயலில் காரணமாக விமானங்கள் ரத்து செய்யப்பட்டு வளைகுடா நாடுகள் உள்ளிட்ட நாடுகளில் இருந்து தமிழ்நாட்டிற்கு இணைப்பு விமானம் மூலம் பயணித்த தமிழக பயணிகள் இலங்கை விமான நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருக்கின்றனர்.

அவர்களுக்கு விரைந்து மாற்று விமானம் ஏற்பாடு செய்ய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.
மேலும் காத்திருக்கும் நேரத்தில் அவர்களுக்கு தேவையான உணவு தங்குமிடம் உள்ளிட்ட வசதிகளை வழங்கி உதவிடவும் ஒன்றிய அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இவ்வாறு இராமநாதபுரம் நாடாளுமன்ற உறுப்பினர் கே நவாஸ்கனி எம்பி ஒன்றிய வெளியுறவு துறை மற்றும் விமான போக்குவரத்து துறை அமைச்சருக்கு கடிதம் எழுதியுள்ளார்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button