கீழக்கரை சதக்கத்துன் ஜாரியா நடுநிலைப் பள்ளியில் குழந்தைகள் தின விழா

கீழக்கரை சதக்கத்துன் ஜாரியா நடுநிலைப் பள்ளியில் குழந்தைகள் தினம் விழா

இராமநாதபுரம் மாவட்டம் ,கீழக்கரை சதக்கத்துன் ஜாரியா நடுநிலைப் பள்ளியில் (14.11.2025) குழந்தைகள் தினவிழா சிறப்பு நிகழ்ச்சிகள் நடைபெற்றது .நிகழ்ச்சிக்கு பள்ளியின் தலைமை ஆசிரியர் திருமதி A.இந்திராகாந்தி (பொறுப்பு )வரவேற்புரை ஆற்றினார் . பள்ளியின் கல்விக்குழு தலைவர் திரு. சேக் உசேன் மற்றும் பள்ளியின் நிர்வாக அலுவலர் திரு.M.செய்யது இபுராகிம் அவர்கள் முன்னிலை வகித்தனர். இந்நிகழ்ச்சியில் பள்ளியின் உடற்கல்வி ஆசிரியர் திரு.பாபுராயர் குழந்தைகள் தின விழா பற்றி சிறப்புரை ஆற்றினார் .நிகழ்ச்சியின் தொடர்ச்சியாக மாணவ மாணவியர்களுக்கு திருக்குறள் ஒப்புவித்தல் , மாறுவேடப்போட்டி ,பேச்சுப்போட்டி ,பாடல், ஓவியம்,கவிதை வாசித்தல் போன்ற போட்டிகள் நடைபெற்றன .திருக்குறள் ஒப்புவித்தலில் மூன்றாம் வகுப்பு மாணவி .M.P.ஹரிணி 100 திருக்குறள்களை கூறி முதல் பரிசு பெற்றார்.
மாறுவேடப்போட்டி – S .அகமது ஃபசான் நான்காம் வகுப்பு
பேச்சுப்போட்டி – B .தர்ஷிகா ஐந்தாம் வகுப்பு ,K .M ,யுவஸ்ரீ எட்டாம் வகுப்பு
மெல்லிசை பாடல் -G .காவியா ஐந்தாம் வகுப்பு
கவிதைப்போட்டி – M .S .அஞ்சனா ,M . ஹனியா ஆறாம் வகுப்பு
ஓவியப்போட்டி – D மேகதர்ஷினி ஆறாம் வகுப்பு
பாடல் போட்டி – K . அல்ரஸ்மியா ஆறாம் வகுப்பு
M .பாத்திமா பௌமிதா ஏழாம் வகுப்பு
K .யாஷினி ஸ்ரீ , M .மோனிகா , I .ஹேமசக்தி -எட்டாம் வகுப்பு
வெற்றி பெற்ற மாணவ மாணவியருக்கு பள்ளியின் கல்வி குழு தலைவர் திரு.சேக் உசேன் அவர்கள் பரிசுகள் ரொக்க பணம் மற்றும் பாராட்டுகளை வழங்கினார் .நிகழ்ச்சியில் ஆசிரியர்கள் திருமதி. R.கவிப்பிரியா, திருமதி. A. ஜோஸ்பின் விமலா, திருமதி. L.M.A. செய்யதலி பாத்திமா, திருமதி. M. சாஹிதா பர்வின், திருமதி. S. சந்திர பிரபா, திருமதி. P. அனீஸ் பாத்துமா , திருமதி .S.மோகனப்பிரியா , திரு .T.சூர்யா ஆகியோர் கலந்து கொண்டு பள்ளிமாணவ மாணவியருக்கு இனிப்புகளை வழங்கினார்கள் .




