இராமநாதபுரம்

27 நாட்களில் 140 கஞ்சா வியாபாரிகள் கைது. எஸ்பி சந்தீஷ் தகவல்

27 நாட்களில் 140 கஞ்சா வியாபாரிகள் கைது. எஸ்பி சந்தீஷ் தகவல்

காவல்துறை உயர் அதிகாரிகளின் ஆலோசனையின் படி பள்ளி கல்லூரி மற்றும் கிராமப்புறங்களில் போதை பொருள் விற்பனை செய்யும் சிறு வியாபாரிகளை கைது செய்வதே இலக்கு.

ராமநாதபுரத்தில் மத்திய தகவல் ஒளிபரப்பு துறை சார்பில் ஊடகவியலாளர்களுக்கான பயிலரங்கு நடைபெற்றது. மத்திய தகவல் ஒளிபரப்பு துறை சென்னை மண்டல இயக்குனர் அருண்குமார் முன்னிலையில் ஊடகங்கவியலாளர்கள் பயிலரங்கை மாவட்ட ஆட்சியர் சிவகுரு பிரபாகர் துவக்கி வைத்தார்.பயிலரங்கில் நிறைவு உரையாற்றிய மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சந்தீஷ் பேசுகையில் ராமநாதபுரம் மாவட்டத்தில் கடந்த ஆண்டு ஆயிரம் கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. தற்போது தமிழக முதலமைச்சர் மற்றும் காவல் துறை உயர் அதிகாரிகள் அறிவுரைப்படி தீவிரமான கஞ்சா மற்றும் போதை பொருள் கடத்தல் மற்றும் விற்பனை தடுப்பு பணியில் ராமநாதபுரம் மாவட்ட காவல்துறை ஈடுபட்டு வருகிறது இந்த ஜூலை மாதத்தில் மட்டும் 140 சிறு சிறு கஞ்சா வியாபாரிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடமிருந்து சில்லறை விற்பனைக்காக வைத்திருந்த 130 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. போதைப் பொருள் கடத்தல் மற்றும் போதைப்பொருள் விற்பனையை தடுப்பதில் ராமநாதபுரம் மாவட்டத்தில் தீவிர நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்று கூறினார். தொடர்ந்து ஒரு நாள் பயிலரங்கில் கலந்து கொண்டு பயிற்சி பெற்ற ஊடகவியலாளர்களுக்கு சான்றிதழ்களை வழங்கி பாராட்டினார்.
மத்திய தகவல் ஒளிபரப்பு துறை தென்மண்டல இயக்குநர் ஜெனரல் (பொ) பழனிச்சாமி,
உதவி இயக்குனர்
விஜயலட்சுமி மாவட்ட அளவிலான செய்தி ஊடகவியலாளர்கள் கலந்து கொண்டனர்

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button