அண்ணாவின் 117வது பிறந்த நாளில் உறுதிமொழி ஏற்பு

அமைச்சர் ஆர் எஸ் ராஜகண்ணப்பன் அவர்களின் தலைமையில் அண்ணாவின் 117வது பிறந்த நாளில் உறுதிமொழி ஏற்பு

இராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் மத்திய ஒன்றியம் மற்றும் முதுகுளத்தூர் பேரூராட்சி சார்பில் முதுகுளத்தூர் பேருந்து நிலையம் முன்பு முன்னாள் முதல்வர் அறிஞர் அண்ணா அவர்களின் 117வது பிறந்த நாள் விழா வனம் மற்றும் கதர்வாரியத்துறை அமைச்சர் ஆர் எஸ் ராஜகண்ணப்பன் தலைமையில் மலர் தூவி கொண்டாடப்பட்டது.
இதனைத் தொடர்ந்து அண்ணா பிறந்த நாளை ஒட்டி நடைபெற்ற உறுதி மொழியில்
ஓரணியில் தமிழ்நாடு இயக்கத்தில் இணைந்துள்ள 1 கோடி குடும்பத்தினரும் சேர்ந்து, ‘தமிழ்நாட்டைத் தலைகுனிய விடமாட்டோம்!’ என உறுதி ஏற்கிறோம்!
நான், தமிழ்நாட்டின் நாடாளுமன்ற உறுப்பினர்களின் விகிதாசாரத்தைக் குறைக்கும் நியாயமற்ற தொகுதி மறுவரையறைக்கு எதிராகப் போராடுவேன்; தமிழ்நாட்டைத் தலைகுனிய விடமாட்டேன் என உறுதி ஏற்கிறேன்.
நான், வாக்காளர் பட்டியல் மோசடி மூலம் தமிழ்நாட்டு மக்களின் வாக்குரிமையைப் பறிக்கும் SIR-க்கு எதிராக நிற்பேன்; தமிழ்நாட்டைத் தலைகுனிய விடமாட்டேன் உறுதி ஏற்கிறேன்.
நான், நீட் மற்றும் இளைஞர்களை முடக்கும் எந்தவொரு திட்டத்தையும் எதிர்த்து நிற்பேன், நம் மாணவர்களுக்கு உரிய கல்வி நிதிக்காகப் போராடுவேன்; ஒருபோதும் தமிழ்நாட்டைத் தலைகுனிய விடமாட்டேன் என உறுதி ஏற்கிறேன்.
நான், தமிழ் மொழி, பண்பாடு மற்றும் பெருமைக்கு (நன்மதிப்பிற்கு) எதிரான எந்தவொரு பாகுபாட்டையும் எதிர்த்துப் போராடுவேன். எதற்காகவும் தமிழ்நாட்டைத் தலைகுனிய விடமாட்டேன் என உறுதி ஏற்கிறேன்.
நான், ‘பெண்கள் – விவசாயிகள் – மீனவர்கள் – நெசவாளர்கள் தொழிலாளர்கள்’ என ஒவ்வொரு உழைக்கும் வர்க்கத்தின் நலன்களையும் பாதுகாக்கத் தேவையான நிதிக்காகப் போராடுவேன். தமிழ்நாட்டைத் தலைகுனிய விடமாட்டேன் என உறுதி ஏற்கிறேன்.
என தமிழ்நாடு வனம் மற்றும் கதர் கிராம தொழில்கள் வாரியத்துறை அமைச்சர் அவர்கள் தலைமையில் உறுதிமொழி ஏற்கப்பட்டது இந்த விழாவில் ஏராளமான பொதுமக்கள், திமுக நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.



