இராமநாதபுரம்

11வது தேசிய கைத்தறி தின கொண்டாட்டம் நெசவாளர்களுக்கு_நலத்திட்டஉதவி

11வது தேசிய கைத்தறிதின கொண்டாடம் நெசவாளர்களுக்கு_நலத்திட்டஉதவி

இராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் 11வது தேசிய கைத்தறி தினம் கொண்டாடப்பட்டது.இதில் நெசவாளர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.

சுதேசி இயக்கம் 1905 ஆக.,7ல் துவக்கப் பட்டதை நினைவு கூறும் வகையில் கைத்தறி நெசவாளர்களை கவுரவப் படுத்தும் விதமாக தேசிய கைத்தறி தினம் கொண்டாடப்படுகிறது.
பரமக்குடி-எமனேஸ்வரம் பகுதியில் நெசவாளர்களுக்கான இலவச மருத்துவ முகாம், நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடந்தது.பரமக்குடி ஆர்.டி.ஓ., சரவண பெருமாள் தலைமை வகித்து பேசியதாவது:
பரமக்குடி-எமனேஸ் வரம் பகுதியில் உள்ள நெசவாளர்கள் தமிழ்நாட்டின் தட்பவெட்ப சூழலுக்கு ஏற்ப சேலைகளை நெய்கின்றனர். மானம் காக்கும் தொழில் செய்யும் நெசவாளர்களை தலை வணங்கி பாராட்டுகிறேன் என்றார்.
தாசில்தார் வரதன், மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் கார்த்திகேயன், நகராட்சி தலைவர் சேது கருணாநிதி முன்னிலை வகித்து நலத்திட்ட உதவிகளை வழங்கினர். பரமக்குடி கைத்தறி உதவி இயக்குனர் சேரன் அனைவரையும் வரவேற்றார்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button