இராமநாதபுரம்

கீழக்கரை நுகர்வோர் நலச் சங்கத்தின் பொதுக்குழு கூட்டம்

கீழக்கரை நுகர்வோர் நலச் சங்கத்தின் பொதுக்குழு கூட்டம்

இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை நுகர்வோர் நல சங்கத்தின் பொதுக்குழு கூட்டம் அதன் தலைவர் செய்யது இப்ராஹிம் தலைமையில் நடைபெற்றது.மேலும் இதில் பல்வேறு தீர்மானங்களும் நிறைவேற்றப்பட்டது.
2024 -2025ஆம் ஆண்டுக்கான தணிக்கை அறிக்கை ஏக மனதாக தீர்மானிக்கப்பட்டது,கீழக்கரை நுகர்வோர் நலச் சங்கத்தின் மாநில முகவரி பட்டியலில் இடம் பெற்றுள்ள மாவட்ட நிர்வாகம் மற்றும் சங்கத்தின் தலைவர் செயலாளர்,பொருளாளர், அனைவருக்கும் பாராட்டுக்கள் தெரிவிக்கப்பட்டது,கீழக்கரை தாலுகாவிற்கு உட்பட்ட நீதிமன்றம் செயல்பட வேண்டும் ஏக மனதாக தீர்மானிக்கப்பட்டது,கீழக்கரை அரசு கட்டடத்தில் நவீன முறையில் நூலக அமைத்து பொதுமக்கள், மாணவ மாணவிகள் பயன்பெற வேண்டும் என்று தீர்மானிக்கப்பட்டது,கீழக்கரை பகுதியில் போக்குவரத்து காவல் நிலையம் அமைக்க ஏக மனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது,
பொதுமக்கள் நஞ்சு இல்லா உணவு வழங்க அரசு முனைப்புடன் செயல்பட வேண்டும் ஏக மனதாக தீர்மானிக்கப்பட்டது.பொதுக்குழுவில் செயலாளர் பாக்கர் அலி ஆண்டு அறிக்கை சமர்ப்பித்தார்,பொருளாளர் விஜயராமு தணிக்கை அறிக்கையை சமர்ப்பித்தார் ஜாகிர் உசேன். சீனி இப்ராஹிம்,முகமது யூசுப், முத்துசாமி, மலராஜ், மற்றும் உறுப்பினர் கலந்து கொண்டனர்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button