இராமநாதபுரம்
லஞ்சம் வாங்கிய கிராம நிர்வாக அலுவலர்கள் மற்றும் கிராம உதவியாளர்

லஞ்சம் வாங்கிய கிராம நிர்வாக அலுவலர்கள் மற்றும் கிராம உதவியாளர்

இராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை தாலுகா பெறுவாகோட்டை கிராமத்தை சேர்ந்த நபரிடம் அவருக்கு சொந்தமான இடத்தை அளப்பதற்கு கிராம நிர்வாக அலுவலர் ரூ. 4000/- ம் லஞ்சமாக கேட்டுள்ளார். அதில் ரூ. 500/-ஐ குறைத்து மேற்படி ரூ. 1000/- ஐ முன்பணமாக கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு கிராம நிர்வாக அலுவலர் பெற்றுள்ளார்.மேற்படி மீதம் உள்ள ரூ. 2500/-ஐ இன்று லஞ்சமாக வாங்கிய கிராம நிர்வாக அலுவலர் நைனா முகமது மற்றும் கிராம உதவியாளர் சித்ரா ஆகியோர்கள் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசாரிடம் கையும் களவுமாக சிக்கினார்கள்.
இதுகுறித்து லஞ்ச ஒழிப்பு போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.




