இராமநாதபுரம்

கடலாடி அரசு மேல்நிலைப் பள்ளியில் மாணவர்களுக்கான கழிப்பறை வசதி இல்லாத அவல நிலை

கடலாடி அரசு மேல்நிலைப் பள்ளியில் மாணவர்களுக்கான கழிப்பறை வசதி இல்லாத அவல நிலை

இராமநாதபுரம் மாவட்டம் கடலாடி அரசு மேல்நிலைப் பள்ளியில் 6 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்புகள் வரை உள்ளன. இதில் மாணவர்கள் 600 க்கும் மேற்பட்டோர் கல்வி பயின்று வருகின்றனர். தலைமையாசிரியர் உட்பட 25 ஆசிரியர்கள் பணியில் உள்ளனர். சுற்றுவட்டார கிராமங்களைச் சேர்ந்த ஏராளமான மாணவர்கள் கடலாடி அரசு மேல்நிலைப் பள்ளியில் படித்து வருகின்றனர். இந்நிலையில் கடலாடி அரசு மேல்நிலைப் பள்ளியில் மாணவர்களுக்கான குறைந்தளவு கழிப்பறை வளாகம் உள்ளது. ஆனால் மாணவர்களுக்கான கழிப்பறை வசதியுடன் கூடிய வளாக கட்டமைப்பு இல்லை. இதனால் இயற்கை உபாதையை கழிக்க அவசரத்திற்கு திறந்த வெளியை நாடும் அவல நிலை நீடிக்கிறது. எனவே மாவட்ட கல்விதுறை அலுவலர்கள் பள்ளியை ஆய்வு செய்து மாணவர்களுக்கான மின் மோட்டார் வசதியுடன் கூடிய கழிப்பறை வளாகங்களை ஏற்படுத்தி கொடுக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்தனர்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button