இராமநாதபுரம்
மாரத்தான் போட்டி

பிரபாகரனின் பிறந்தநாளை முன்னிட்டு நாம்தமிழர் கட்சியின் சார்பில் நடைபெற்ற மாரத்தான் போட்டியில் ஏராளமானோர் கலந்து கொண்டனர். இராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் பிரபாகரனின் 71வது பிறந்தநாளை முன்னிட்டு நாம்தமிழர் கட்சியின் சார்பில் மாரத்தான் போட்டி நடைபெற்றது. ஆண்களுக்கு ஐந்துமுனை பகுதியிலிருந்து மேலாய்க்குடி வரையும், பெண்களுக்கு அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் தொடங்கி சரஸ்வதி நகர் வரையும் நடைபெற்றது. ஆண்களுக்கு எட்டு கிலோமீட்டர், பெண்களுக்கு ஐந்து கிலோ மீட்டர் என இரு பிரிவுகளாக நடைபெற்றது. சிறுவர், சிறுமியர், ஆண்கள், பெண்கள் என சுமார் 250க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.





