இராமநாதபுரம்

சங்கு ஊதி நூதன போராட்டம்!

சங்கு ஊதி நூதன போராட்டம்!

கமுதி அருகே மழையால் சேதமடைந்த சாலையை சீரமைக்க வலியுறுத்தி சங்கு ஊதி பொதுமக்கள் நூதனப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ராமநாதபுரம் மாவட்டம், கமுதி அடுத்த பாப்பிரெட்டியபட்டி கிராமத்திலிருந்து பெருநாழி, கமுதி, அருப்புக்கோட்டை, விளாத்திகுளம், சாயல்குடி உள்ளிட்ட நகரங்களில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு தினமும் மாணவ, மாணவிகள் செல்கின்றறனர். இந்த நிலையில் இங்குள்ள பிரதான சாலை தற்போது பெய்து வரும் தொடர் மழையின் காரணமாக சேதமடைந்து குண்டும் குழியுமாக காட்சியளிக்கிறது.

இந்தச் சாலையை சீரமைக்க வலியுறுத்தி ஊராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சித் துறைற, மாவட்ட நிர்வாகம், உள்ளாட்சி பிரதிநிதிகள்உள்ளிட்டோரிடம் பலமுறை பாப்பிரெட்டியபட்டி கிராம மக்கள் புகார் மனுக்கள் அளித்தும் பலனில்லை.

இதையடுத்து அதிகாரிகளின் கவனத்தை ஈர்க்கும் வகையில், அந்த கிராம மக்கள் சாலையை சீரமைக்க வலியுறுத்தி சாலையில் மலர்கள்தூவி, கற்பூரம் ஏற்றி, சங்குஊதி பிரார்த்தனைசெய்துநூதனபோராட்டத்தில் ஈடுபட்டனர்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button