General News

துபாயில் ஐக்கிய முதுகுளத்தூர் முஸ்லிம் ஜமாஅத் நிர்வாகிகள் கூட்டம்

துபாயில் ஐக்கிய முதுகுளத்தூர் முஸ்லிம் ஜமாஅத் நிர்வாகிகள் கூட்டம் 21.03.2009 சனிக்கிழமை மாலை ஈமான் அலுவலகத்தில் நடைபெற்றது.

கூட்டத்திற்கு ஜமாஅத் தலைவர் என்.எஸ்.ஏ. நிஜாமுத்தீன் தலைமை வகித்தார். பொருளாளர் ஏ. அஹ்மது இம்தாதுல்லாஹ் இறைவசனங்களை ஓதினார்.  ஒருங்கிணைப்பாளர் ஹெச். இப்னு சிக்கந்தர் முன்னிலை வகித்தார்.

பொதுச்செயலாளர் கே.முஹம்மது ஹிதாயத்துல்லாஹ் வரவேற்புரை நிகழ்த்தினார்.

முதுகுளத்தூர் திடல் ஜமாஅத்தின் தகவல் கையேட்டை பொருளாளர் ஏ. அஹ்மது இம்தாதுல்லாஹ் வெளியிட முதல் பிரதியை ஹெச். இப்னு சிக்கந்தர் பெற்றுக்கொண்டார்.

தாயகத்தில் செயல்படுத்தப்பட்டு வரும் கல்வி மற்றும் சமுதாய மேம்பாட்டுப் பணிகள் குறித்து விவாதிக்கப்பட்டது. முதுகுளத்தூர்.காம் (www.mudukulathur.com) இணையத்தள விரிவாக்கம் குறித்தும் விவாதிக்கப்பட்டது. ஜமாஅத் வளர்ச்சிக்கு ஒத்துழைப்பு நல்கி வரும் முதுவைவிஷன்.காம் (www.muduvaivision.com) இணையத்தள குழுவினருக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது.

கூட்டத்தில் செயற்குழு உறுப்பினர்கள் எம். காஜா நஜுமுத்தீன், ஏ. ஜஹாங்கீர், என். பக்ருதீன், ஜாபர் அலி, ஷேக் முஹம்மது, ஹபிப் முஹம்மது உள்ளிட்டோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர். என்.எஸ்.ஏ. நிஜாமுத்தீன் அவர்களது துஆவுடன் நிகழ்ச்சி நிறைவுற்றது.

To view images please click the link

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Check Also
Close
Back to top button