இராமநாதபுரம்

முன்னாள் முதல்வர் காமராஜர் அவர்களின் பிறந்தநாள் நிகழ்வில் சட்டமன்ற உறுப்பினர் புகழாரம்

முன்னாள் முதல்வர் காமராஜர் அவர்களின் பிறந்தநாள் நிகழ்வில் சட்டமன்ற உறுப்பினர் புகழாரம்

பெருந்தலைவர் காமராஜர் அவர்களின் 123- வது பிறந்தநாள் விழாவினை முன்னிட்டு இராமநாதபுரம் மாவட்டம் கமுதியில் உள்ள பெருந்தலைவர் காமராஜர் அவர்களின் திருவுருவசிலைக்கு இராமநாதபுரம் மாவட்ட செயலாளரும் சட்டமன்ற உறுப்பினருமான காதர்பாட்சா முத்துராமலிங்கம் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.இந்நிகழ்வில் ஒன்றிய பேரூர் கழக செயலாளர்கள் கழக நிர்வாகிகள் மக்கள் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.மேலும் கல்விக்கண் திறந்த பெருந்தலைவர் தன் வாழ்நாள் முழுமைக்கும் எளிமையை கடைபிடித்து இந்த மண்ணை விட்டு மறைந்தாலும் நம் மனதில் தலைமுறை கடந்து வாழ்ந்து கொண்டிருக்கிறார் என்று புகழாரம் சூட்டினார்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button