இராமநாதபுரம் மன்னர் பாஸ்கர சேதுபதி அவர்களின் வழித்தோன்றல்…

இராமநாதபுரம் மன்னர் பாஸ்கர சேதுபதி அவர்களின் வழித்தோன்றல்…

ராஜாராம் பாண்டியன் அவர்களின் பெயரன்…இன்றைய இராமநாதபுரம் மாவட்ட காங்கிரஸ் கட்சியின் மாவட்டத் தலைவராக நியமிக்கப் பட்டுள்ள அன்பு நண்பர் ராஜாராம் பாண்டியன் அவர்களுக்கு வாழ்த்துகள். மிகச் சரியான தருணத்தில் சுதந்திரப் போராட்ட வீரரின் வாரிசு இன்று காங்கிரஸ் கட்சியின் மாவட்ட தலைவராக வந்திருக்கிறார்.
இவரின் தாத்தா ராஜாராம் பாண்டியன் ஜவகர்லால் நேரு அவர்களுடன் நேரடி தொடர்பில் இருந்தவர்.
ஒத்துழையாமை இயக்கம் அண்ணல் காந்தி அடிகள் அறிவித்த நிலையில் இராமநாதபுரத்தில் அதனை தலைமை ஏற்கும் பொறுப்பு நேரு ராஜாராம் பாண்டியன் அவர்களிடம் வழங்கி இருந்தார்.ஒத்துழையாமை இயக்கம் இராமநாதபுரம் மாவட்டத்தில் வெற்றி பெற்றது. அதனை வாழ்த்தி நேரு, ராஜாராம் பாண்டியன்
அவகர்களுக்கு கடிதம் எழுதியதாக, ஒரு விடுதலைப் போராளியின் வாழ்க்கைப் பயணம் எனும் நூலில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் இராமநாதபுரம் மாவட்ட முதல் செயலாளர், விடுதலைப் போராட்ட வீரர் தோழர் எம் வி சுந்தரம் குறிப்பிட்டுள்ளார்.
இன்று தலைமுறைகள் கடந்த பின்னர் சுதந்திர போராட்ட வீரரின் வாரிசான ராகுல் அவர்கள் இந்தியாவின் கடைக்கோடி மாவட்டத்தில் இன்னொரு சுதந்திர போராட்ட வாரிசான அண்ணன் ராஜாராம் பாண்டியன் அவர்களுக்கு மாவட்ட தலைவர் பொறுப்பு வழங்கியது காலப் பொருத்தமாகும்.
பாஜகவின் மோடி அரசாங்கத்தை அகற்றுவது என்பது இந்தியாவின் இரண்டாவது சுதந்திரப் போராட்டம் ஆகும்.
போராட்டத்தில் இணைந்து பயணிப்போம். இந்தியாவை மதவாத பாசிச சக்தியிடம் இருந்து மீட்போம்.
தோழமையுடன்
என் எஸ் பெருமாள்
மாவட்ட செயலாளர்
இந்திய கம்யூனிஸ்ட்
இராமநாதபுரம்




